408

601. பணைந்து ஏந்து இள முலை அமுதம் ஊற-பாலால் இடங்கொண்டேந்திய இளைய முலை1பால்சுரக்கும்படி,

602-3. [புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு, வளமனை மகளிர் குளநீ ரயர:]

புலவு புனிறு தீர்ந்து குளம் நீர் அயர - புலானாற்றத்தையுடைய ஈன்றணிமைநீங்கித் தெய்வத்தினருளால் ஓரிடுக்கணுமற்றுக் குளத்து நீரிலே குளிக்கையினாலே,

2கடு சூல் மகளிர் பேணி (609)-முதற்சூல்கொண்டமகளிர் இவ்வாறே இடுக்கணின்றிப் புதல்வரைப் பயத்தல்வேண்டுமென்று தெய்வத்தைப் பரவிக் குறை தீர்ந்தபின்,

பொலிந்த சுற்றமொடு - மிக்க சுற்றத்தாருடனே,

வளம் மனை மகளிர் - செல்வத்தையுடைய மனை மகளிர்,

இல்லிருக்குங் குடிப்பிறந்த மகளிர்.

604. திவவு மெய் நிறுத்து செவ்வழி பண்ணி-வலிக்கட்டினை யாழிற்றண்டிலே கட்டிச் செவ்வழியென்னும் பண்ணை வாசித்து,

திவவுக் கூறவே அதினரம்பும் கூறினார்.

605. குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி-குரலென்னுநரம்பு கூடின வன்னம் நன்றாகிய யாழுடனே முழவும் பொருந்தி,

606. நுண் நீர் ஆகுளி இரட்ட - மெல்லிய நீர்மையினையுடைய சிறுபறை யொலிப்ப,
பலவுடன்-பூசைக்குவேண்டும் பொருள்கள் பலவற்றுடனே,

607. ஒள் சுடர் விளக்கம் முந்துற - ஒள்ளிய சுடர்விளக்கம் முற்பட,

மடையொடு - பாற்போனகமுதலிய சோறுகளை,

608. நல் மா மயிலின் மென்மெல இயலி - நன்றாகிய பெருமையையுடைய மயில்போலே மெத்தென நடந்து,

609. [கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது :]

கை தொழுது-கையாற்றொழுது.

610. [பெருந்தோட் சாலினி மடுப்ப வொருசார் :]


1. பால்சுரக்கும்படி நீரயர்ந்தாரென்றார், ஈன்றவுடன் மகளிர்க்குப் பால் சுரவாதாதலின் ; இது, "பால்சொரியும் பருவத்தளவும் பொறாளாய்ப் பாலை வலிய வாங்கியென்க ; என்றது மகப்பயந்தோர்க்குப் பயந்தபொழுதே பால் சுரவாதாதலால்" (சீவக. 305, .) என்பதனால் உணரப்படும்.

2. சிறுபாண். 148, ந. குறிப்புரையைப் பார்க்க.