41

1 - திருமுருகாற்றுப்படை

வாயள் : வினையெச்சமுற்று.

1துணங்கை தூங்க - துணங்கைக் கூத்தாட,

2"பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கை யாகும்."

கதுப்பு (47) முதலியவற்றையுடைய பேய்மகள் (51) தலையை (53) ஏந்தி (54) வாயளாய்ப் (56) பாடித் (55) தூங்கவென முடிக்க.

57. 3இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை - மக்கள் வடிவும் விலங்கின் வடிவுமாகிய 4இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றாகிய பெரிய உடல்,

58. அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி - ஆறாகிய வேறு பட்ட கூற்றாலே அச்சந்தோன்ற மிக்குச் சென்று,

என்றதனான்,5இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப அதனை இருடிகள் உணர்ந்து அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே இறைவன் கூறாகிய முத்திக்கட்பெய்து அதனைத் தம்மனைவியர் கையிற் கொடுப்ப அருந்ததியொழிந்த அறுவரும் வாங்கிக்கொண்டு விழுங்கிச் சூன்முதிர்ந்து சரவணப் பொய்கையிற்6பதுமப்பாயலிலே


1சிங்கிக் கூத்து (வேறுரை)

2"முடக்கிய விருகை பழுப்புடை யொற்றத், துடக்கிய நடையது துணங்கை யாகும் " (திவா. பிங்கல.) எனவும் பாடம்.

3இரு பேர் உரு - சூரனென்றும் பதுமனென்றும் இரண்டு பேரையுடைய வடிவம் (வேறுரை)

4இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றாகிய உடலென்றது, குதிரைமுகமும் மக்களுடலுங்கொண்ட சூரபன்மாவின் உடலத்தை; "ஈரணிக் கேற்ற வொடியாப் படிவத்துச் சூர் " (கலித். 93 : 25 - 6) என்பதற்கு, ‘ கெடாத விரதத்தாலே முகம் குதிரைமுகமும் உடல் மக்களுடலுமாகிய இரண்டு அழகுக்குப் பொருந்திய சூரபன்மா என்றெழுதிய நச்சினார்க்கினியர் உரையும், "சூரொடும்பொர வஞ்சிசூடிய பிள்ளை யார்படை தொட்டநாள், ஈருடம்பு மிசைந்திரண்டுதி ரப்பரப்பு மிறைத்தனம்" (தக்க. 231) என்பதனுரையில் அதனுரையாசிரியர் எழுதிய, ‘சூரபன்மாவான ............. அசுரசேனாபதி பட்டுவிழ அவனுடைய குதிரையும் அசுரனுமான இரண்டு வடிவும்' என்ற பகுதியும் இங்கே கருதத்தக்கன.

5 254, 255-ஆம் அடிகளின் விசேடவுரையிலும் இக்கதை எழுதப்பட்டுள்ளது.

6" பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல் " (பரி. 5 : 49)