411

621. பணிலம் கலி அவிந்து அடங்க-சங்குகள் ஆரவாரமொழிந்து அடங்கிக்கிடக்க,

621-2. காழ் சாய்த்து நொடை நவில் நெடு கடை அடைத்து-சட்டக்காலை வாங்கிப் பண்டங்களுக்கு விலைகூறும் நெடியகடையையடைத்து,

622-3. மட மதர் ஒள் இழை மகளிர் பள்ளி அயர-மடப்பத்தினையும் செருக்கினையும் ஒள்ளிய அணிகலங்களையுமுடைய மகளிர் துயிலுதலைச்செய்ய,

624-6. [நல்வரி யிறாஅல் புரையு மெல்லடை, யயிருருப் புற்ற வாடமை விசயங், கவவொடு பிடித்த வகையமை மோதகம் :]

விசயம் ஆடு அமை நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை-பாகிலே சமைத்தலமைந்த நல்லவரிகளையுடைய தேனிறாலையொக்கும் மெல்லிய அடையினையும்,

கவவொடு அயிர் பிடித்த வகை அமை உருப்பு உற்ற மோதகம்-பருப்பும் தேங்காயுமாகிய உள்ளீடு (உள்ளே இடப்பெற்ற பொருள்கள்) களோடே1கண்டசருக்கரைகூட்டிப்பிடித்த வகுப்பமைந்த வெம்மை பொருந்தின அப்பங்களையும்,

627. தீ சேறு 2கூவியர் தூங்குவனர் உறங்க-இனிய பாகோடு சேர்த்துக்கரைத்த மாவினையுமுடைய அப்பவாணிகரும் அவற்றோடேயிருந்து தூங்குவனராயுறங்க,

628. விழவின் ஆடும் வயிரியர் மடிய-திருநாளின்கண்ணே கூத்தாடுங் கூத்தர் அதனையொழிந்து துயில்கொள்ள,

629. பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய-ஒலிநிறைந்தடங்கின

குளிர்ந்த கடலையொக்க,

630. பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப-படுக்கையிலே துயில்கொள்ளவோர் கண் இனிதாகத் துயில்கொள்ள,

631. [பானாட் கொண்ட கங்கு லிடையது :]

பால் நாள் கொண்ட கங்குல்-பதினைந்தாநாழிகையை முடிவாகக் கொண்ட கங்குல்,

632-3. [பேயு மணங்கு முருவுகொண் டாய்கோற், கூற்றக்கொஃறேர் கழுதொடு கொட்ப :]

பேயும் அணங்கும் உருவு கொண்டு கழுதொடு கொட்ப-பேய்களும் வருத்துந்தெய்வங்களும் வடிவுகொண்டு

கழுதுடனே சுழன்றுதிரிய,

கழுது-பேயில் ஒருசாதி.


1.கண்டசருக்கரை-கற்கண்டு; ஒருவகைச் சருக்கரையுமாம்.

2.கூவியர்-அப்பவாணிகர்; பெரும்பாண். 377, ந.