412

ஆய் கோல் கூற்றம் கொல் தேர் அச்சம் அறியாது ஏமமாகிய (652) மதுரை (699) யெனக்கூட்டி, யாக்கை நிலையாதென்றறிந்து மறுமைக்கு வேண்டுவன செய்துகொண்டமையின், அழகிய கோலையுடைய கூற்றத்தின் கொலைக்கு அஞ்சாமற் காவலுண்டாயிருக்கின்ற மதுரை யென்க.

"கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார், துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார், வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம், வருங்காற் பரிவ திலர்" (நாலடி. 35) என்றார் பிறரும். கொஃறேர்-காலசக்கரம்.

634. இடி பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு - கரியபிடியின் கண்ணேமேவின தோலையொத்த கருமைதமக்கு இயல்பாகச் சேரப்பட்டு,

இருள் - கருஞ்சட்டையுமாம்.

635. கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை நிலன் அகழ் உளியர் (641)-கல்லையும்மரத்தையுமறுக்கும் கூர்மையையுடைய நிலத்தையகழும் உளியையுடையராய்,

நிலத்தை அகழுங்காலத்து இடைப்பட்டகற்களுக்கும் மரங்களுக்கும் வாய் மடியாதென்றார்.

636. தொடலை வாளர்-தூக்கிட்ட வாளினையுடையராய்,

தொடுதோல் அடியர்-செருப்புக்கோத்த அடியினையுடையராய்,

637-41. [குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச், சிறந்த கருமை நுண்வினை நுணங்கற, னிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர், மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர், நிலனக ழுளியர் :]

சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல் (638)-மிக்க கருமை யினையுடைய நுண்ணிய தொழில்களையுடைய நுண்மை தன்னிடத்தே பற்றுதலையுடையது,

என்றது இறைமுடிந்த சேலையென்றவாறு ; ஆகுபெயர்.

குறங்கிடை பதித்த கூர் நுனை குறு பிடி (637)-அச்சேலைகட்டின மருங்கிற் குறங்கிடைத் தெரியாமற் கிடக்கும்படியழுத்தின கூரிய முனையினையுடைய1சிலசொட்டை,

நிறம் கவர்பு புனைந்த நீலம் கச்சினர் (639)-பலநிறங்களைத் தன்னிடத்தே கைக்கொண்டு கைசெய்யப்பட்ட நீலநிறத்தையுடைய கச்சினையுடையராய்,


1.சில சொட்டை-ஒருவகை வளைவுக்கத்தி ; உடைவாளுமாம் ; "சொட்டைவாள் பரிசை", "உகிரெ னும்பெரும் பெயர்பெற்ற சொட்டைகளும்" (வி. பா. கிருட்டின. 101, பதினேழாம்போர். 156)