1களவுகாண்டற்கும் காத்தற்குங்கூறிய நூல்கள் போவாரென்றார். 2நூல்வழிப்பிழையா ஊரெனக்கூட்டி நூலிற்சொன்னபடி சமைந்த வூரென்றுமாம். ஊக்க அரு கணையினர்-தப்பக்கருதிமுயல்வார்க்குத் தப்புதற்கரிய அம்பினையுடையராய், 648-9. தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக மழை அமைந்துற்ற அரை நாள் அமயமும்-தேரோடுந்தெருவின்கண்ணே நீர்திரண்டொழுகும்படி மழைமிகப்பெய்த நடுநாளாகிய பொழுதிலும், 650. அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்-காவலில் தப்பிலராய்ப்போந்து விருப்பந்தோன்றி உலாவுகையினாலே, 651. [கடவுள் வழங்குங் கையறு கங்குலும் :] இடையது (631) கடவுள் வழங்கும் கை அறு கங்குல்-இரண்டாஞ் சாமத்திற்கும் நான் காஞ் சாமத்திற்கும் நடுவிடத்ததாகிய தெய்வங்களுலாவுஞ் செயலற்ற கங்குல், உம்மையை யாமமுமெனப் பின்னேகூட்டுக. 652-3. [அச்ச மறியா தேம மாகிய, மற்றை யாமம் பகலுறக் கழிப்பி :] மற்றையென்பதனை முந்தையாமஞ் சென்றபின்றை (620) யென்பதன் பின்னும் மூன்றாஞ்சாமத்தினோடுங் கூட்டுக. அச்சமறியாதேமமாகிய என்றும், மற்றையென்றும் யாமமென்றும் பிரித்து முன்னே கூட்டுக. பகல் உற கழிப்பி-இங்ஙனம் பகுத்தலுறும்படி போக்கி, முந்தை யாமஞ் சென்ற பின்றை (620) மற்றைப் (653) பானாட்கொண்ட கங்குல் (631) யாமத்தையும் மற்றை (653) இடையதாகிய (631) கடவுள் வழங்குங் கங்குல் (651) யாமத்தையும் (653) கலியவிந்தடங்கப் (612) பள்ளியயர (623) உறங்க (627) வயிரியர்மடியப் (628) பேயும் அணங்கும் உருவுகொண்டு (632) கழுதொடுகொட்ப (633)ஊர்
1.களவு காண்டற் குரியநூலைக் கரவடசாத்திரமென்பர் தக்க யாகப்பரணி உரையாசிரியர். இந்நூல் தந்திர கரணமென்றும் ஸ்தேய சாஸ்திரமென்றும் வழங்கப்படும். இதனைச் செய்தவர் கர்ணீஸுதரென்பவர். 2.நூல்-சிற்பநூல் ; "நூலறிபுலவோர்-சிற்பநூலை யறிந்த தச்சர்" (நெடுநல். 76, ந.); "நுண்ணிதி னுணர்ந்தோ ருணர்தருஞ் சிற்ப நூலறி புலவனை" (வி. பா. இந்திரப். 10) ; "நூலோர் சிறப்பின்மாடம் .........." (சிலப். 14:97) என்பதன் உரையில் அரும்பதவுரையாசிரியர், ‘மயமதம் அறிவாராற் புகழ்ச்சியையுடைய மாடமென்றுமாம்' என்றெழுதியதனால் மயமதமென்னும் நூலொன்றுண்மை பெறப்படும்.
|