662-3. இல்லோர் நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி-கற்புடை மகளிர் தாங்கள் விரும்பின கணவருடைய முயக்கத்திற் பிணிப்பாலே துயில்கொண்டு, 664. புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி-இருள்மாய்ந்து கதிர் விரிகின்ற விடியற்காலத்தைப் பெறுகையினாலே அக்காலத்து இல்லத்திற் செய்யத் தகுவனவற்றைச் செய்தற்குவிரும்பி, 665. கண் பொரா எறிக்கும் மின்னு கொடி புரைய-கண்ணை வெறியோடப்பண்ணி விளங்கும் மின்னொழுங்கை யொப்ப, 666. ஒள் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி-ஒள்ளிய பொன்னாற் செய்துவிளங்குஞ் சிலம்புமுதலியன ஒலிப்பப் புறம் போதுகையினாலே, 667. திண் சுவர் நல் இல் கதவம் கரைய-திண்ணியசுவர்களையுடைய நல்ல அகங்களிற் கதவுகள் ஒலிப்ப, 668-9. உண்டு மகிழ் தட்ட மழலை நாவில் பழ செருக்காளர் தழங்கு குரல் தோன்ற-கள்ளையுண்டு களிப்பினைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்ட மழலைவார்த்தையையுடைய நாவினையுடைய பழையகளிப் பினையுடையாருடைய முழங்குகின்ற குரல்கள் தோன்ற, 670. சூதர் வாழ்த்த மாகதர் நுவல-நின்றேத்துவார்வாழ்த்த இருந்தேத்துவார் புகழைச்சொல்ல, 671. வேதாளிகரொடு நாழிகை இசைப்ப-வைதாளிகர் தத்தம் துறைக்குரியனவற்றையிசைப்ப நாழிகை சொல்லுவார் நாழிகைசொல்ல, நாழிகை : ஆகுபெயர். 672. இமிழ் முரசு இரங்க-ஒலிக்கின்ற1பள்ளியெழுச்சிமுரசு ஒலிப்ப, ஏறு மாறு சிலைப்ப-ஏறுகள் தம்முள் மாறுபட்டு முழங்க, 673. பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப-பொறியினையுடைய மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்துகூவ, 674-5. யானையங்குருகின் சேவலொடு காமர் அன்னம் கரைய-வண்டாழ்ங்குருகினுடைய சேவல்களோடே விருப்பத்தையுடைய அன்னச் சேவல்களும் தமக்குரிய பேடைகளை யழைக்க, அணி மயில் அகவ-அழகியமயில்கள் பேடைகளை யழைக்க, 676. பிடி புணர் பெரு களிறு முழங்க-பிடியோடேகூடின பெரிய யானைகள் முழங்க, 676-7. [முழுவலிக், கூட்டுறை வயமாப் புலியொடு குழும :] வய மா கூடு உறை முழு வலி புலியொடு குழும-கரடிமுதலிய வலிய
1.மதுரைக். 232-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
|