686. இரவு தலை பெயரும் ஏமம் வைகறை-இராக்காலம் தன்னிடத்தில் நின்றும் போகின்ற எல்லாவுயிர்க்கும் பாதுகாவலாகிய விடியற்காலத்தே, பாடப் (656) பண்ணக் (658) கைப்பத் (659) தெவிட்ட (660) உறுப்ப (661) நுவலக் (662) கரையத் (667) தோன்ற (669) வாழ்த்த நுவல (670) இசைப்ப (671) இரங்கச் சிலைப்ப (672) இயம்பக் (673) கரைய அகவ (675) முழங்கக் (676) குழுமச் (677) சீப்பத் (685) தலைப்பெயருமென முடிக்க. 687-8. மை படு பெரு தோள் மழவர் ஓட்டி இடை புலத்து ஒழிந்த ஏந்து கோடு யானை - பிறர்தோள் குற்றப்படுதற்குக் காரணமான பெரியதோளையுடைய மழவரைக்கொடுத்து அவர் விட்டுப்போகையினாலே போர்க்களத்தே நின்ற ஏந்தின கொம்பினையுடைய யானைகளும், 1மழவர்-சிலவீரர். 689. பகை புலம் கவர்ந்த பாய் 2பரி புரவி-பகைவர்நாட்டிலே கைக்கொண்டுவந்த பாய்ந்துசெல்லும் செலவினையுடைய குதிரைகளும், 690-92. [வேல்கோ லாக வான்செல நூறிக், காய்சின முன்பிற் கடுங்கட் கூளிய, ரூர்சுடு விளக்கிற் றந்த வாயமும் :] காய் சினம் முன்பின் கடுங்கண் கூளியர் ஊர் சுடு விளக்கின் ஆள் செல நூறி வேல் கோல் ஆக தந்த ஆயமும்-எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையினையுமுடைய ஆயக்கரையிலிருந்த வேட்டுவர் பகைவரூரைச் சுடுகின்ற விளக்கிலே நிரைகாத்திருந்த வீரரைமாளவெட்டி வேல்கோலாக அடித்துக்கொண்டுவந்த பசுத்திரளும், 693. நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி - அகநாட்டைச் சூழவுடைத்தாகிய 3முழுவரண்களிலிட்ட வருத்தத்தையுடைய கதவுகளும், 694-5. நாள் தொறும் விளங்க கை தொழூஉ பழிச்சி நாள் தரவந்த விழு கலம்-நாடொறும் தமக்குச் செல்வமிகும்படியாகக் கையாற்றொழுதுவாழ்த்தி நாட்காலத்தே திறையாகக்கொண்டுவர வந்த சீரிய கலங்களும், அனைத்தும்-அத்தன்மையனபிறவும், 696-7. கங்கை அம் பெரு யாறு கடல் படர்ந்தாங்கு அளந்து கடை அறியா மதுரை(699)-4கங்கையாகிய அழகிய பெரியயாறு
1.மதுரைக். 395, ந, 2.பரி-செலவு; "காலே பரிதப் பினவே" (குறுந். 44:1) 3.முழுவரண்-முழுமுதலரணம். 4."இறுவரை யிமயத் துயர்மிசை யிழிந்து, பன்முகம் பரப்பிப் பௌவம் புகூஉம், நன்முகக் கங்கையி னகரம்" (பெருங். 2. 17:33-4)
|