1ஆயிரமுகமாகக் கடலிலேசென்றாற்போல அளந்து முடிவறியாத மதுரை, வளம் கெழு தாரமொடு-வளப்பம்பொருந்தின அரும்பண்டங்களோடே, 698. [புத்தே ளுலகங் கவினிக் காண்வர :] புத்தேள் உலகம் காண்வர கவினி-தேவருலகம்வந்து காணுதலுண்டாகத் தான் அழகைப் பெற்று, 699. மிக்கு புகழ் எய்திய பெரு பெயர் மதுரை-மிகுத்துப் புகழைப் பெற்ற பெரும்பொருளையுடைய மதுரை, பெரும்பொருளென்றது, வீட்டினை : "பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய" (பதிற். 90:23) என்றார் பிறரும். கூற்றக் கொஃறேர் (633) அச்சமறியாதேமமாகிய (652) மிக்குப் புகழெய்திய மதுரை (699) யென்க. பாடல்சான்ற நன்னாட்டு நடுவணதாய் (331) இருபெருநியமத்து (365) நாளங்காடிக்கம்பலை (430) நாடார்த்தன்றேயாய் (428) அல்லங்காடி அழிதருகம்பலை (544) புள்ளின் இசையெழுந்தற்றேயாய் (543) ஞாயிறு (546) குன்றஞ் சேருகையினாலே (547) மாலை (558) புகுந்து (557) பின்னர்நீங்க (558) முந்தையாமஞ்சென்றபின்றை (620) மற்றைப் (653)பானாட்கொண்டகங்குல் (631) யாமத்தையும் மற்றை (653) யிடையதாகிய (631) கடவுள் வழங்குங்கங்குல் (651) யாமத்தையும் பகலுறக் கழிப்பிச் (653) சீப்ப (685) இராக்காலந் தன்னிடத்தினின்றும் போகின்றவைகறையிலே (686) வளங்கெழுதாரத்தோடே (697) யானையும் (688) புரவியும் (689) ஆயமும் (692) தோட்டியும் (693) கலமும் அனைத்தும் (695) கங்கையாறுகடற்படர்ந்தாற்போல (696) அளந்து முடிவறியாத (697) மதுரை (699) என்க. கவினிப் (698) புகழெய்திய (699) பெரும்பாணிருக்கை (342) முதலியவற்றையுடைய மதுரை (699) என்க. 700-701. [சினதலை மணந்த சுரும்புபடு செந்தனை யொண்பூம் பிண்டி யவிழ்ந்த காவில் :] சினை தலை மணந்த பிண்டி சுரும்பு படு செ தீ ஒள் பூ அவிழ்ந்த காவில்-கொம்புகள் தம்மிற்றலைகூடின அசோகினுடைய சுரும்புகளுண்டாஞ் செந்தீப்போலும் ஒள்ளியபூவிருந்த பொழிலிடத்தே,
1."கங்கை, துறைகொ ளாயிர முகமுஞ் சுழல" (கல்.) ; "ஐயமிலமர ரேத்த வாயிர முகம தாகி, வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை" (தே. திருநா.) ; "அந்தரத் தமர ரடியிணை வணங்க வாயிர முகத்தினா லருளி, மந்தரத் திழிந்த கங்கை" (பெரிய திருமொழி. 1. 4:7)
|