என்றதனால், நாட்காலையில் அரசர் குரிய கடன்கள் கழித்துத் தெய்வ வழிபாட்டோடிருந்தமை கூறினார். திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் (715) ஒள் காழ் ஆரம் கவைஇய மார்பின் (716)-திண்ணிய வயிரத்தையுடைய சந்தனத்தைப் பூசி ஒளி விடும் ஒள்ளிய வடமாகிய முத்துச்சூழ்ந்த மார்பிலே, நீவியென்னுஞ் செய்தெனெச்சம் பிறவினைகொண்டது. வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப (717)-வரியையுடைத்தாகிய பின்னையுடைய தேனினமும் மற்றும் மொய்க்கப்படுவனவாகிய வண்டு முதலியனவும் மொய்ப்ப, எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் (718)-கழுத்திடத்தினின்றுந் தாழ்ந்த விரவுதலையுடைய பூமாலையையுடைத்தாகிய மார்பென (716) முன்னே கூட்டுக. பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம் (719) வலி கெழு தடகை தொடியொடு சுடர்வர (720)-பொன்னாற்செய்கையினாலே பொலிவு பெற்ற மணிகளழுத்தின மோதிரம் வலிபொருந்தின பெரிய கையில்1வீர வளையோடு விளக்கம்வர, சோறு அமைவு உற்ற நீர் உடை கலிங்கம் (721)-சோறு தன்னிடத்தே பொருந்துதலுற்ற நீரையுடைய துகில் என்றது 2கஞ்சியிட்ட துகிலை. உடை அணி பொலிய குறைவு இன்று கவைஇ (722)-உடைக்கு மேலணியும் அணிகலங்களாலே அது பொலிவுபெறும்படி தாழ்வின்றாக வுடுத்து, புணர்ந்து (712) துஞ்சி (713) எழுந்து (714) உருவினையாகி (724) மார்பிலே (716) பிரசமும் மூசுவனவும் மொய்ப்ப (717) விளக்கம் (719) தொடியொடு சுடர்வரக் (720) கலிங்கத்தைக் (721) கவைஇ (722) யென முடிக்க. 725-6. 3வரு புனல் கல் சிறை கடுப்ப இடை மறுத்துஒன்னார்
1.மதுரைக். 34-ஆம் அடியின் உரையைப் பார்க்க. 2."காடி கொண்ட கழுவுறு கலிங்கம்" (நெடுநல். 134) ; "நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத், தலைப்புடை போக்கித் தண்கயத்திட்ட, நீரிற் பிரியாப் பரூஉத்திரி" (குறுந். 330, 1-3) ; "பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைந் தூட்டிய, பூந்துகில்" (அகநா. 387:6-7) ; "காடி யுண்ட பூந்துகில்" (சீவக. 71) ; "காடி கலந்த கோடிக் கலிங்கம்" (பெருங். 1. 54:9) 3."தனிச்சேவகமாவது வருவிசைப் புனலைக் கற்சிறைபோல ஒருவன் றாங்கிய பெருமை" (வீர. பொருள். 16, உரை)
|