727. 1வாள் வலம் புணர்ந்த நின் தான் வலம் வாழ்த்த-வாள் வெற்றியைப் பொருந்தின நினது முயற்சியின்வெற்றியைவாழ்த்த, 728-9. வில்லை கவைஇ கணை தாங்கும் மார்பின் மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்மின்-வில்லை நிரம்பவலிக்கையினாலே தன்னுள்ளேயடக்கிக் கொண்ட அம்பின் விசையைத்தாங்கு மார்பினையும்2குதிரைனயச்செலுத்தி வேண்டுமளவிலே பிடிக்கும் வலியையுடைய தோளினையுமுடைய வீரரைக்கொணர்மின் ; தம்மின் : முன்னிலை முற்றுவினைத்திரிசொல். இது தும்பையிற்3குதிரைநிலைகூறிற்று. கணைதாங்குமார்பு கூறவே4கணை துணையுற மொய்த்தலுங் கூறிற்று. 730-31. கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் நல் எயில் உழந்த செல்வர் தம்மின்-கற்றரையைப் பொளிந்துபண்ணின இட்டிதாகிய நீர்வரும்வாயையுடைய கிடங்கினையுடைய முழுமுதலரணத்தேநின்று வருந்தின வீரச்செல்வத்தையுடையாரைக் கொணர்மின் ; இஃது, "ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்" (தொல். புறத். சூ. 13) என்னும் புறத்துழிஞைத்துறை கூறிற்று. 732-3. கொல் ஏறு பைந்தோல் சீவாது போர்த்த மா கண் முரசம் ஓவு இல கறங்க-மாறுபாட்டையேற்றுக் கோறற்றொழிலையுடைய5ஏற்றினது செவ்வித்தோலை மயிர் சீவாமற்போர்த்த பெரிய கண்ணையுடையமுரசம் மாறாமல் நின்று ஒலியாநிற்க. 734-6. எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண் பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்மின்-நெருப்பு நடந்தாற்போன்ற பகைவர்படைக்கு நடுவேசென்று பெரிய நல்ல யானையைப் போர்க்களத்தே பட வெட்டிச் சீரிய புண்ணினால்வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்;
1.வாள்வெற்றியை வாழ்த்துதற்கு வீரரே உரியரென்பது சிறுபாணாற்றுப்படை, 210-12-ஆம் அடிகளாலும் அறியப்படும். 2."நிமிர் பரிய மாதாங்கவும்-மிகைத்த செலவினையுடைய குதிரையைக் குசைதாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும்" (புறநா. 14:7, உரை) 3.தொல். புறத்திணை. சூ. 17. 4.ஷெ ஷெ சூ. 16. 5."மயிர்க்கண்முரசு-புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோடுமண்கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த முரசு" (சிலப். 5:88, அடியார்.)
|