இது, "களிறெதிர்ந் தெறிந்தோர்பாடு" (தொல். புறத். சூ. 17) என்னும் தும்பைத்துறை கூறிற்று. பாடு, பெருமையாகலின் அது தோன்ற ஈண்டுக்குருசி லென்றார். முறைகருதுபு (738)- 1முன்னுளோர்காத்தமுறைமையை நாளும் உட்கொண்டு, 737. புரையோர்க்கு-நட்பிற் குற்றந்தீர்ந்தோர்பொருட்டு, நான்காமுருபு ஈண்டு அதற்பொருட்டு ; (தொல்.வேற்றுமை. சூ. 15) 737-8. [தொடுத்த பொலம்பூந் தும்பை,நீர்யா ரென்னாது முறை கருதுபு சூட்டி :] தொடுத்த பொலம் பூ தும்பை சூட்டி-கட்டப்பட்டபொன்னாற் செய்த பூவினையுடைய தும்பையைச்சூட்டிஏவுகையினாலே, 739. காழ் மண்டு எஃகமொடு கணை அலைகலங்கி-காம்பு குழைச் சினுள்ளே செருகின வேல்களுடனேஅம்புகளுஞ்சென்று நிலைகுலைத்தலின் நிலைகலங்கி, 740-43. [பிரிபிணை யரிந்த நிறஞ்சிதைகவயத்து, வானத்தன்ன வளநகர் பொற்ப, நோன்குறட்டன்ன வூன்சாய் மார்பி, னுயர்ந்த வுதவி யூக்கலர்த்தம்மின் :] பிரிபு இணை அரிந்த நிறம் சிதை 2கவயத்து(740) ஊன் சாய் (742)-பலவாய்ப் பிரிந்து இணைந்த சந்துவாய்களற்றபழையநிறங்கெட்ட கவயத்தோடே ஊன்கெட்ட, நோன் குறடு அன்ன மார்பின்(742)-வலிய சகடையிற்குறட்டையொத்த மார்பினையுடையராகியஊக்கல (743) ரென்க. வேலும் அம்பும் பட்டு எங்கும்உருவிநிற்றலிற் குறடும் அதிற்றைத்த 3ஆர்களும்போன்றன மார்புகள் ; 4குறடு பட்டடைமரமுமாம். வானத்து அன்ன வளம் நகர் பொற்ப(741) உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின் (743)-5தேவருலகையொத்தசெல்வத்தையுடைய ஊர்கள் முன்புபோலே நட்புக்கொண்டஅகத்துழிஞையோராளும்படி உயர்ந்த உதவியைச் செய்தமுயற்சியையுடையாரைக் கொணர்மின் ;
1."அறநெறி காட்டிப்,பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது" (மதுரைக்.191-2) 2கவயம்-கவசம் ; "வயக் கவயந் தண்டவணோர்,மாமகனுக் காக மகிழ்சிறந்தார்" ஆனந்த. வண்டு.) 3(பி-ம்) ‘உருளிகளும்' 4சீவக. 2281 5"மீக்கூறுதல், இவன்காக்கின்ற நாடு பசிபிணி பகை முதலியவின்றியாவர்க்கும் பேரின்பந் தருதலிற் றேவருலகினும் நன்றென்றல்"(குறள், 386, பரிமேல்.) என்றதனோடு இக்கருத்து ஒத்துள்ளது.
|