என்றது, தமக்குநட்பாய் முற்றகப்பட்டோரைமுற்றுவிடுவித்தற்குத் தாமே உதவலின், 1மைந்துபொருளாகச்சென்று அம்முற்றுவிடுவித்து அவ்வூரை அவர்க்கு மீட்டுக்கொடுத்தமைகூறிற்று. இதனானே 2உழிஞைப்புறத்துத் தும்பைகூறினார் ;என்னை? "கணையும் வேலுந்துணையுற மொய்த்தலிற், சென்றவுயிரி னின்ற யாக்கை" (தொல். புறத். சூ. 16)கூறுதலானும் வளநகர் பெறும்படி உயர்ந்த உதவிசெய்தமை கூறுதலானும். 744-6. நிவந்த யானை கணம் நிரை கவர்ந்தபுலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல் பெரு செய்ஆடவர் தம்மின்-உயர்ந்த யானைத்திரளினொழுங்குகளைக்கைக்கொண்ட பூசிப்புலர்ந்த சாந்தினையும்,விரவுதலையுடைய வியன்பூ மாலையினையும், பெரியசெய்கைகளையுமுடையமண்டலங்களை ஆள்கின்றவரைக் கொணர்மின் : 746-8. [பிறரும், யாவரும் வருக வேனோருந்தம்மென, வரையாவாயிற் செறாஅது :] ஏனோரும் தம்மென வரையா- 3மண்டபத்தாரையும்,அறங்கூற வையத்தாரையுங் (மதுரைக். 492) கொணர்மினெனவரைந்துகூறி, வாயில் செறாது பிறரும் யாவரும்வருக என-வாயிலிடத்துத் தகையாமல் இவர்களைப்போல்வாரும் படையாளர் முதலியோரும் வருவாராக வெனக்கூறி, 748. இருந்து-இங்ஙனம் எளியையாயிருந்து, 749-50. [பாணர் வருக, பாட்டியர் வருக,யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென :] யாணர்புலவரொடு பாணர் வருக பாட்டியர் வருக வயிரியர் வருகஎன-கவியாகிய புதுவருவாயினையுடைய புலவ
1."மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச்,சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப" (தொல்.புறத். சூ. 15) 2."முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தற்கு வேறோர் வேந்தன் வந்துழி, அவன்புறம்போந்து களங்குறித்துப் போர் செய்யக்கருதுதலும் அவன் களங்குறித்துழிப் புறத்தோனும் களங்குறித்துப்போர் செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத்தும்பையாம்"(தொல். புறத். சூ. 16, ந.) 3இங்கே மண்டபத்தாரென்றது, பட்டிமண்டபத்தாரைப்போலும் ; பட்டி மண்டபம்-கல்விக்கழகம் ;"பட்டி மண்டபத்துப் பாங்கறிந்தேறுமின்" (மணி.1:61) ; பட்டி மண்டப மேற்றினை யேற்றினை" (திருவா.சதகம். 49) ; "பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்"என்றார் கம்பரும். மதுரையில், இப்பொழுது புதுமண்டபமெனவழங்கும் இடத்தில் முன்பு பழைய மண்டபமொன்றுஇருந்திருத்தல் கூடுமென்றும், அஃது இப்பட்டிமண்டபம்போலுமென்றும்சிலர் கருதுவர்.
|