ரோடே பாணர் வருவாராக,பாணிச்சியர் வருவாராக, கூத்தர் வருவாராகவெனஅழைத்து, 751-2. [இருங்கிளை புரக்கு மிரவலர்க்கெல்லாங், கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி :] இரு கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்நீர் யார் என்னாது (738) கொடுஞ்சி நெடு தேர்களிற்றொடும் வீசி-அவர்கள் சுற்றத்தாராய் அவர்கள்பாதுகாக்கும் பெரிய இரவலர்க்கெல்லாம் நீர்யாவரென்றுஅவர்களைக் கேளாதே அவர்கள் காட்டின அளவைக்கொண்டுகொடுஞ்சியையுடைய நெடியதேர்களை யானைகளோடுங்கொடுத்து, கொடுஞ்சி-தாமரைப்பூவாகப்பண்ணித்தேர்த்தட்டின் முன்னே நடுவது. 753. களம் தோறும் கள் அரிப்ப - இடந்தோறுங்கள்ளையரிப்ப, 754. மரம் தோறும் மை வீழ்ப்ப - மரத்தடிகள்தோறும்செம்மறிக் கிடாயைப்படுப்ப, 755. நிணம் ஊன் சுட்டு உருக்கு அமைய-நிணத்தையுடையதசைகள் சுடுதலாலே அந்நிணம் உருகுதல்பொருந்த, 756. நெய் கனிந்து வறை ஆர்ப்ப - நெய்நிறையப்பெற்றுப் பொரிக்கறிகள் ஆரவாரிப்ப, 757-8. குருஉ குய் புகை மழை மங்குலின்பரந்து தோன்றா - நிறத்தையுடைய தாளிப்பிலெழுந்தபுகை மழையையுடைய திசைகள் போலப் பரந்து தோன்றப்பட்டு, 758. வியல் நகரால்-அகற்சியையுடையவீடுகளாலே மிக்குப்புகழெய்திய மதுரை (699) என முன்னேகூட்டுக. நகர்-வீடுகள். அரிப்ப (753) வீழ்ப்ப (754) அமைய(755) ஆர்ப்பத் (756) தோன்றப்பட்டு (758) அகற்சியையுடையஎன உடைமையொடு முடிக்க. 759-62. [பல்சாலை முதுகுடுமியி, னல்வேள்வித்துறைபோகிய, தொல்லாணை நல்லாசிரியர், புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் :] நல் வேள்வி துறை போகிய-நல்ல யாகங்கட்குக்கூறியதுறைகளெல்லாம் முன்னர் முற்றமுடித்துவிட்ட, தொல் ஆணை நல் ஆசிரியர் (761)புணர் கூட்டு உண்ட (762)-பழைய ஆணைகளையுடைய நல்ல ஆசிரியர்தாங்கள் பின்புகூடின 1கந்தழியாகியகொள்ளையை அவரிடத்தே பெற்று அனுபவித்த, புகழ் சால் சிறப்பின் (762)பால்சாலைமுதுகுடுமியின் (759)-புகழ்ச்சியமைந்ததலைமையினையுடைய 2பல்யாகசாலை முதுகுடுமிப்
1.திருமுருகாற்றுப்படை உரையின்இறுதிப் பகுதியைப் பார்க்க. 2.பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி : இவ்வரசன் பலயாகங்
|