புகார் அறு சிறப்பின் செம்மைசான்றோர் பலர் வாய் தோன்றி-குற்றமற்ற சிறப்புக்களையுடையதலைமைகளெல்லாம் அமைந்தோர் பலரும் தம்மிலிருந்துசொல்லப்பட்டு, பலர்வாயென்பதனோடும் பின்வரும்புகரறுசிறப்பைக் கூட்டுக. புகரறு சிறப்பிற் செம்மையாவன :-1"நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்"என்புழிக் கூறப்பட்டவை. 766. அரிய தந்து-இவ்விடத்திற்குஅரியவாய் வேற்றுப்புலத்திலுள்ள பொருள்களைக்கொணர்ந்து எல்லார்க்குங் கொடுத்து, குடி அகற்றி-நின்னாட்டில் வாழும்குடிமக்களைப் பெருக்கி, என்றது, செல்வமுண்டாக்கி யென்றதாம் 767. பெரிய கற்று - நற்பொருள்களை விளங்கக்கூறிய நூல்களைக் கற்று, இசை விளக்கி - நின்புகழே எவ்வுலகத்தும் நிறுத்தி, 768. முந்நீர் நாப்பண் ஞாயிறுபோலவும்-கடனடுவேதோன்றுகின்ற ஞாயிற்றையொக்கவும், 769. பல் மீன் நடுவண் திங்கள்போலவும் - பல மீன்களுக்கு நடுவே தோன்றுகின்ற நிறைமதியைப் போலவும், 770. பூத்த சுற்றமொடு பொலிந்து இனிதுவிளங்கி - நீ பொலிவு பெற்ற சுற்றத்தாருடனே பொலிவு பெற்று இனிதாகவிளங்கி, 2மண்டிலமாக்கள் தண்டத்தலைவர்முதலிய சுற்றத்தோர்க்கு நடுவே ஞாயிறு போலவிளங்கி,பலகலைகளைக் கற்றோரிடத்தே 3மதிபோலவிளங்கி யென்க.
1.தொல். புறத். சூ. 20 ; இங்கேகூறப்பட்ட நாலிரு வழக்கினை, "நீஇ ராட னிலக்கிடைகோட, றோஒ லுடுத்த றொல்லெரி யோம்ப, லூரடை யாமையுறுசடை புனைதல், காட்டி லுணவு கடவுட் பூசை, யேற்ற தவத்தினியல்பென மொழிப" (தொல். புறத். சூ. 16, இளம்.சூ. 20, ந. மேற்.) என்பதனாலும். "ஊணசையின்மை,நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம்பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல்,இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை ; இனி யோகஞ் செய்வார்க்குரியனஇயமம் ................ சமாதியென வெட்டும்" (தொல்.புறத். சூ. 20, ந.) என்பதனாலும் அறியலாகும். 2.சுற்றத்திடையே இருக்கும் பொழுதுசூரியனை உவமை கூறுதலை, பெரும்பாண். 441-7-ஆம்அடிகளும், ‘கடலைச் சுற்றத் திரட்சிக்கு உவமையாக்கலும்ஒன்று' (பெரும்பாண். 443-50, விசேடவுரை) என்ற நச்சினார்க்கினியர்உரையும் அறிவித்தல் காண்க. 3.கலை நிறைந்தமைபற்றி மதியைஉவமை கூறுதல் மரபென்பது இவ்வுரையாசிரியர் பிறஇடங்களி லெழுதிய உரையினாலறியப் படுகின்றது; முருகு.968 குறிப்புரையைப் பார்க்க.
|