771-2. பொய்யா நல் இசை நிறுத்தபுனை தார் பெரு பெயர் மாறன் தலைவனாக-உண்மையானநல்ல புகழை உலகிலே நிறுத்தின கைசெய்த மாலையினையும்பெரிய பெயரினையுமுடைய மாறன் முதலாக, மாறன்-இவன் குடியிலுள்ள பாண்டியன் ;அன்றி ஒரு குறுநில மன்னனென்றலு மொன்று. 773. கடந்து அடு வாய் வாள் இள பல்கோசர்-பகைவரை வென்று கொல்லும் தப்பாதவாளினையுடையஇளைய பலராகிய கோசரும், 774-7. [இயனெறி மரபினின்வாய்மொழி கேட்பப், பொலம்பூ ணைவ ருட்படப்புகழ்ந்த, மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன, ரவரும்பிறரும் :] புகழ்ந்த பொலம் பூண் ஐவர் உட்பட(775)-எல்லாராலும் புகழப்பட்ட பொன்னாற் செய்த பேரணிகலங்களையுடையஐம்பெருங்கேளிருமுட்பட, மறம் மிகு சிறப்பின் குறுநிலமன்னர்(776) அவரும் (777)-மற மிக்க நிலைமையினையுடைய குறுநிலமன்னராகியஅவரும், பிறரும் (777)-கூறாதொழிந்தோரும், இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப (774)-நடக்கின்ற நெறிமுறைமையினாலேநின்னுடைய உண்மையானமொழியைக் கேட்டு அதன்வழியேநடக்க, 777-8. [துவன்றிப், பொற்புவிளங்குபுகழவை நிற்புகழ்ந்தேத்த] பொற்பு விளங்கு புகழ்அவை துவன்றி நின் புகழ்ந்து ஏத்த-பொலிவுவிளங்குகின்ற புகழினையுடைய அறங்கூறவையத்தார்நெருங்கி நின்னுடைய அறத்தின் தன்மையைப் புகழ்ந்துவாழ்த்த, 779-81. [இலங்கிழை மகளிர் பொலங்கலத்தேந்திய, மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு, மகிழ்ந்து :] இலங்கு இழை மகளிர் பொலம் கலத்துஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப மகிழ்ந்து-விளங்குகின்றபூணினையுடையமகளிர் பொன்னாற் செய்த வட்டில்களிலேயெடுத்தமணநாறுகின்ற 1காமபானத்தைத்தர அதனையுண்டுமகிழ்ச்சியெய்தி மகளிர்தோள்புணர்ந்து (712) எனமுன்னேகூட்டுக.
1.பானம், காமபானம் வீரபானமெனஇருவகைத்து ; "மட்டு-காமபானம்" (சீவக. 98, ந.),"நறவு கொண்மகளிர்-காமபானம் செய்யும் வாமமார்க்கப்பெண்காள்" (தக்க. 24, உரை) என உரையாசிரியர்கள்இதனைக் கூறலும், "காம வருத்திய பயிர்க்குநீர்போலருநற வருந்து வாரை" (கம்ப. ஊர்தேடு.107) என்று கம்பர் குறிப்பித்தலும் இங்க அறியற்பாலன.
|