ஏழாவது 1 நெடுநல்வாடை | வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென வார்கலி முனை இய கொடுங்கோற் கோவல ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப் | 5 | புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட னீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயன் மறப்ப மந்தி கூரப் | 10 | புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட னீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயன் மறப்ப மந்தி கூரப் |
1. வலனேர்பு : முல்லை. 4-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 3. கொடுங்கோற் கோவலர் : முல்லை. 15- ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. 4. ஏறுடை யினநிரை : "வேறுபுலம் படர்ந்த வேறுடை யினத்த, வளையான்" (மலைபடு. 408-9); "ஏறுடை யினத்துப், புல்லூர் நல்லான்" (குறுந். 275 : 3-4) ; " ஏறுடை யினநிரை" (அகநா. 269 :3) ; " ஏறு பொருந்திய பசுநிரை" (பு. வெ. 5, உரை) ;" பாலெடுத்தபொற் குடநிகர் மடியின பருவச், சூலெ டுத்தநல் வயிற்றின மழவிடை தொடர்வ" (வி.பா.நிரைமீட்சி. 57) 5. (பி - ம்.)‘புலம்பிற்கலங்கி ' 9. " விலங்குகள் மேயாமையின், வாயிழந்தன ; ‘மாமேயன் மறப்ப' என்றார் பிறரும்" (சீவக.1158, ந.) ; மந்திகூர : கைந்நிலை, 36 ; கம்ப. கார்கால 76. 12. முசுண்டை புதலில் மலர்தல் : அகநா. 163 : 9. 13. புன்கொடி முசுண்டை : மலைபடு. 101. 12 - 3. கூதிர்ப்பானாளில் முசுண்டை மலர்தல் ; அகநா. 94:1-3, 264 : 1 - 2. 14. பீரத்திற்குப் பொன் உவமை : " பொன்புனை பீரத் தலர்", " பொன்னென, இவர்கொடிப் பீர மிரும்புதன் மலரும்" (ஐங். 452 : 5, 464 : 1 - 2) 1 இதனைப் பெருந்திணையென்பர் பு. வெ. உரையாசிரியர் ; பு. வெ. 284.
|