438
70கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக்
காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து
கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டில
மிருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர் 
75பொருதிறஞ் சாரா வரைநா ளமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்
தொருங்குடன் வளைஇ யோங்குநிலை வரைப்பிற்
80பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத்
துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
85கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்
தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுகக்

" கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ" (சிலப். 28 : 16) ; " தடமுலை வேதுகொண் டொற்றியும்" (கலிங்க.கடை. 13)

70. கருங்கோட்டுச்சீறியாழ் : மலைபடு. 534 ; புறநா. 127 : 1 ; 145 : 5.

72. கூதிர்நின் றன்றாற் போதே : அகநா. 264 : 10.

82. " நாளொடு பெயரிய நவையி லாமரம் " (வாயு. பார்ப்பதி திருமணம். 9)

85. கைவல் கம்மியன் : நெடுநல். 57.

86. முருகு. 228-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

" வாயிலில் தெய்வமுறையுமாகலின், அதற்கு அணியும் நெய்யுமாம் ; 'ஐயவி........நிலை ' என்பதனானுணர்க"(மதுரைக். 354, ந.)

87. யானையின் மீது கொடி : " கொடிநுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து", " மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி, வரை மிசை யருவியின் வயின்வயி னுடங்க", "உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை" (பதிற். 52 : 1, 69 : 1 -2, 88 : 17 ) ; "கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் " (புறநா. 9 : 7) ; "இழந்தன நெடுங்கொடி ............யானை" (கம்ப. சம்புமாலி. 26)