| குன்றுகுயின் றன்ன வோங்குநிலை வாயிற் றிருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பிற் | 90 | றருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை குறுங்கா லன்னமோ டுகளு முன்கடைப் பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு | 95 | நிலவுப்பயன் கொள்ளு நெடுவெண் முற்றத்துக் கிம்புரிப் பகுவா யம்பண நிறையக் கலிழ்ந்துவீ ழருவிப் பாடுவிறந் தயல வொலிநெடும் பீலி யொல்க மெல்லியற் கலிமயி லகவும் வயிற்மரு ளின்னிசை | 100 | நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் யவன ரியற்றிய வனைமாண் பாவை கையேந் தையக னிறையநெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி |
89. முருகு. 70-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 90. (பி - ம்.) ‘ ஞெமரிய ' மு. பெருங்.1. 47 : 197. " தருமணன் ஞெமிரிய திருநா றொருசிறை " (மணி. 18 : 44) ஞெமிர்தலென்பதற்குப் பொருள் பரத்தலெனக்கூறி இவ்வடியை மேற்கோளாகக் காட்டினர் ; தொல். உரி. சூ. 65, சே. ந ; இ - வி. சூ. 281, உரை. 91. அகநா. 34 : 12 - 3. 93. " பணைநிலை முனைஇய வினைநவில் புரவி" (அகநா. 254 : 12.) 95. " வெண்ணிலவின் பயன்றுய்த்தும் " (பட்டினப். 114) ; "நிலவுப்பயன் கொள்ளு நெடுநிலா முற்றத்து" (சிலப். 4 : 31) ; " சுடர் வெண் ணிலவின் றொழிற்பயன் கொண்ட, மிசைநீண் முற்றத்து" (பெருங். 1. 33 : 61 -2) ; "பொங்கிணர்க் காவு தோறும் புதுமணற்குன்று தோறும், பங்கயச் செங்க ணெம்மான் பானிலாப் பயன் கொண்டு" (பாகவதம், 10. கோவியரை. 22) 97. " அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல" (பெரும்பாண். 226) 98. "மஞ்ஞை, ஒலிநெடும் பீலி" (புறநா. 50 : 2 -3) 99. (பி - ம்.)‘களிமயில் '. அகநா. 177 : 10 -11. 100. நளிமலைச்சிலம்பு : முருகு. 238.
|