| புனையா வோவியங் கடுப்பப் புனைவி றளிரேர் மேனித் தாய சுணங்கி னம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை |
150 | வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் மெல்லியன் மகளிர் நல்லடி வருட நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற் செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவு நெடியவு முரைபல பயிற்றி |
155 | யின்னே வருகுவ ரின்றுணை யோரென வுகத்தவை மொழியவு மொல்லாண் மிகக்கலுழ்ந்து நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கா லூறா வறுமுலை கொளீஇய காறிருத்திப் புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத் |
160 | திண்ணிலை மருப்பி னாடுதலை யாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய |
147. " புனையா வோவியம் போல நிற்றலும்", "புனையா வோவியம் புறம்போந் தென்ன"(மணி. 16 : 131 , 22 : 88)
149. அம்பணைத் தடைஇய மென்றோள் : " வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள்" (பதிற். 54 : 3)
தடைஇய மென்றோள் : கலித். 93 : 5.
152. (பி - ம்.) ' நரைவிரவுற்ற '
" நாறைங் கூந்தலு ' நரைவிரா வுற்றன "(மணி. 22 : 130) ; " நரையிடைப் படர்ந்த நறுமென் கூந்தலர்" (பெருங். 1. 41 : 99) ; கடம்பர் கோவிலுலா, 343. பரி. 10 : விசேடக்.
152 - 3. " நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற், செம்முது செவிலியர் பலபா ராட்ட" (அகநா. 254 : 1 -2)
155, " இன்னே வருகுவர்" (முல்லைப். 16)
156. (பி - ம்.)‘ முகைத்தவை '
155 - 6. முல்லை. 20 - 22.
153 - 6. " தலைவியை வற்புறுக்கும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியர் ; இக்கருத்தானே சான்றோர், ‘ செம்முகச்............ஒல்லாள்' என்றார் பாட்டினுள் " (தொல். செய். சூ. 175, ந.)
161. வீங்குசெலன் மண்டிலம் : " யாங்கன மொத்தியோ வீங்கு செலன் மண்டிலம்" (புறநா. 8 : 6)