| வுரோகிணி நினைவன ணோக்கி நெடிதுயிரா மாயித ழேந்திய மலிந்துவீ ழரிப்பனி | 165 | செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக் கின்னா வரும்படர் தீர விறறந் தின்னே முடிகதில் லம்ம மின்னவி ரோடையொடு பொலிந்த வினைநவில் யானை | 170 | நீடிர டடக்கை நிலமிசைப் புரளக் களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவ ரொளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கித் தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல் | 175 | பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமங் களையாப் பாய்பரிக் கலிமா | 180 | விருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப் புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ வாடோட் கோத்த வன்கட் காளை |
164 - 5. கண்ணீரை விரலால் வழித்துத்தெறித்தல் : " இரும்பல் கூந்தற் சேயிழை மடந்தை, கனையிரு ணடுநா ளணையொடு பொருந்தி, வெய்துற்றுப் புலக்கு நெஞ்சமொ டைதுயிரா, வாயிதழ் மழைக்கண் மல்கநோய் கூர்ந்து, பெருந்தோ ணனைக்குங் கலுழ்ந்துவா ரரிப்பனி, மெல்விர லுகிரிற் றெறியினள்" (அகநா. 373 : 10 - 15) ; புறநா. 144 : 9 ; பெருங். 1. 36 : 72. 169. வினை நவில் யானை : " தாரொடு பொலிந்த வினைநவில் யானை " (மலைபடு. 227) ; " செல்சமந் தொலைத்த வினை நவில் யானை "(பதிற். 82 : 4) ; " வினை நவில் யானை " (புறநா. 347 : 11) 169 -71. " வேழத்துப்.............. பரூஉக்கை துமிய.................. ஒழிந்ததோர்" (முல்லை. 69 - 72) ; " அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத், தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து, நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள, எறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தர் " (புறநா. 19 : 9 - 12) 175. " பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல", "சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து " (பதிற். 47 : 6, 52 : 13) ; " உள்ளிழு துறீஇய வொள்ளடர்ப் பாண்டில்" (பெருங். 1. 33 : 93)
|