குளிர்ச்சி வருத்துகையினாலே பலருங்கூடிக் கையிடத்திலேகொண்ட நெருப்பினையுடையராய்ப் 1பற்பறைகொட்டி நடுங்க, கையை நெருப்பிலேகாய்த்தி அதிற்கொண்ட வெம்மையைக் கவுளிலே அடுத்தலிற் கைக்கொள் கொள்ளியரென்றார். கோவலர் (3) பலருடன் (7) பரப்பிக் (4) கலங்கிக் (5) கலாவக் (6) கொள்ளியராய்க் கவுள்புடையூஉ நடுங்க (8) என்க. 9. மா மேயல் மறப்ப - விலங்குகள் மேய்தற்றொழிலை மறந்தொடுங்க, மந்தி 2 கூர - குரங்கு குளிர்ச்சிமிக, குன்னாக்கவென்பாருமுளர். 10. [பறவை படிவன வீழ :] படிவன பறவை வீழ - மரங்களிலே தங்குவனவாகிய புள்ளுக்கள் காற்றுமிகுதியால் நிலத்தேவீழ, 10 - 11. [கறவை, கன்றுகோ ளொழியக் கடிய வீசி :] கறவை கடிய வீசி கன்று கோள் ஒழிய - பசுக்கள் குளிரின் மிகுதியாற் கடியவாய் உதைத்துக் கன்றை ஏற்றுக்கோடலைத் தவிர, 12. குன்று குளிர்ப்பன்ன கூதிர் பால் நாள் - மலையைக் குளிர்ச்சி செய்யுமாறுபோன்ற கூதிர்க்காலத்து நடுயாமத்தே புலம்பொடு வதியுமரி வைக்கு (166) என மேலே கூட்டுக. 13 - 4. புல் கொடி முசுண்டை பொறி புறம் வால் பூ பொன்போல் பீரமொடு புதல் புதல் மலர - புல்லிய கொடியினையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெள்ளிய பூப் பொன்போன்ற நிறத்தையுடைய பீர்க்குடனே சிறுதூறுகடோறும் விரிய, 15 - 9. [பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி, யிருங்களி பரந்த வீர வெண்மணற், செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக், கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்ப், பெயலுலந் தெழுந்த:] கடு புனல் சாஅய் கயல் அறல் எதிர (18) - கடிதாயோடின நீரினின்றும் ஒருகால் பற்றிக் கயல்கள் அற்றநீர்க்கு எதிரேவருகையினாலே, பெயல் உலந்து எழுந்த (19) பைங்கால் கொக்கின் மெல் பறை தொழுதி (15) - மழையாலே வருந்தி அது சிறிது விட்டவளவிலே எழுந்த பசியகாலையுடைய கொக்கினது மெல்லிய சிறகரையுடையதிரள்,
1 " முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி "(கலித். 31 : 20) ; " பன் னுனிபொரு காலம் வர" (வெங்கைக்கோவை, 413) ; " வாடைவந் துடற்ற ...............தருமிரு நிரைப்பலுந் தாளந் தகர்க்க" (வாட்போக்கிக். 85 : 30 - 33) 2 " துவலையி னனைந்த புறத்த தயலது, கூர லிருக்கை யருளி " (நற். 181 : 6 -7)
|