29 - 30. மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் ஆறு கிடந்தன்ன அகல் நெடு தெருவில் -மாடங்களுயர்ந்த வளப்பத்தையுடைய பழையவூரில் யாறு கிடந்தாற்போன்ற அகன்ற நெடியதெருவிலே திரிதர (35) என்க. 31 - 2. படலை கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள் முடலையாக்கை முழு வலி மாக்கள் - தழைவிரவின மாலையினையும் பருத்த அழ கினையுடையவாகிய வலியினையுடைய இறுகினதோளினையும்முறுக்குண்ட உடம்பினையும் நிரம்பின மெய்வலியினையுமுடைய மிலேச்சர், 33. வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து - வண்டுகள்மொய்க்கும் கள்ளையுண்டு மகிழ்ச்சிமிக்கு, 34 - 5. [துவலைத் தண்டுளி பேணார் பகலிறந், திருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர :] துவலை தண் துளி பேணார் இரு கோடு அறுவையர் வேண்டு வயின் திரிதர - சிறுதுவலையாகிய தண்ணியதுளியை அஞ்சாராய் முன்னும்பின்னுந் தொங்கலாக நாலவிட்ட துகிலினையுடையராய்த் தமக்கு வேண்டின இடத்தே திரிதலைச் செய்ய, ‘ பகலிறந்து ' என்பதனை மேலேகூட்டுக. 36 - 7. [வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோண், மெத்தென் :] வெள்ளி வள்ளி வீங்கு இறை மெத்தென் பணை தோள் - வெளுக்கப்பட்ட தாகிய சங்குவளை இறுகின இறையினையுடைய மெத்தென்ற பணை போலுந் தோளினையும், 37. மெத்தென் சாயல் - மெய்ம்முழுதும் 1கட்புலனாய்த் தோன்றுகின்ற மெத்தென்ற சாயலினையும், முத்து உறழ் முறுவல் - முத்தையொத்த பல்லினையும், 38. பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் -பொலிவினையுடைய மகரக்குழையிட்ட அழகிற்குப் பொருந்தின உயர்ந்து தோன்றுகின்ற அழகினையுடைய குளிர்ச்சியையுடைய கண்ணினையும், இனி உருபுமயக்கமாக்கிக் குழையிடத்தேசென்றமர்ந்த கண்ணென்று முரைப்ப. 39. ஏந்து (38) மடவரல் மகளிர் - உயர்ந்து தோன்றுகின்ற மடப்பத்தினையுடைய மகளிர், தோள் (36) முதலியவற்றையுடைய மகளிரென்க. 39 - 41. [பிடகைப் பெய்த, செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத், தவ்வித ழவிழ்பதங் கமழ :] பிடகை பெய்த பைங்கால் பித்திகத்து செவ்வி அரும்பின்2 அ இதழ் பகல் இறந்து (34) அவிழ் பதம் கமழபூந்தட்டிலேயிட்டு வைத்த பசிய காலினையுடைய பிச்சியினுடைய அலருஞ்செவ்வியையுடைய
1 சிறுபாண். 14 - 6, ந. குறிப்புரையைப் பார்க்க. 2பெரும்பாண். 412 - 3, ந. குறிப்புரையைப் பார்க்க.
|