451

58 - 9. [கொடுந்தறிச், சிலம்பி வானூல் வலந்தன தூங்க:] சிலம்பி வால் நூல் வலந்தன கொடு தறி தூங்க-சிலந்தியினது வெள்ளிய நூலாற் சூழப்பட்டனவாய் வளைந்த முளைக்கோலிலே தூங்க,

60. வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் - தேவரூரைத் தீண்டும்படி உயர்ந்த மேலாம் நிலத்திடத்து,

61 - 2. வேனில் பள்ளி தென் வளி தரூஉம் நேர் வாய் கட்டளை திரியாது - இளவேனிற் காலத்துத் துயிலும் படுக்கைக்குத் தென்றற் காற்றைத்தரும் சாலேகத்திலே நின்று உலாவாதே,

நேர்வாய்க் கட்டளையென்றது மாடத்தின்கட் சாலேகத்தை ; கட்டளை தெரியாதென்று பாடமாயின், திறவாதென்க.

62 - 3. திண் நிலை போர் வாய் கதவம் தாழொடு துறப்ப - சிக்கென்ற நிலையினையுடைய இரண்டுகதவும் தம்முட் பொருதல் வாய்த்த கதவு தாழிட்டுக் கிடக்க,

64 - 6. கல்லென் துவலை தூவலின் யாவரும் தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் பகு வாய் தடவில் செ நெருப்பு ஆர - கல்லென்கின்ற ஓசையினையுடைய சிறுதுவலையை வாடைக்காற்று எங்கும் பரப்பு கையினாலே இளையோரும் முதியோரும் குவிந்தவாயையுடைய 1கரகத்திற் றண்ணீரைக் குடியாராய்ப் பகுத்தாற்போன்ற வாயையுடைய 2இந்தளத்திலிட்ட சிவந்த நெருப்பின் வெம்மையை நுகர,

67. ஆடல் மகளிர் பாடல் கொள புணர்மார் - ஆடற்றொழிலையுடைய மகளிர் தாம் பாடுகின்ற பாட்டினை யாழ் தன்னிடத்தே கொள்ளும்படி நரம்பைக் கூட்டுதற்கு,

68 - 9. தண்மையின் திரிந்த இன் குரல் தீ தொடை கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ - குளிர்ச்சியாலே தன் நிலைகுலைந்த இனிய குரலாகிய நரம்பைப் பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தே தடவி,

தீந்தொடை : ஆகுபெயர்.

70. கரு கோடு சிறு யாழ் பண்ணு முறை நிறுப்ப - கரியதண்டினையுடைய சிறிய யாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த,

71. காதலர் பிரிந்தோர் புலம்ப - கணவரைப் பிரிந்த மகளிர் வருந்த,

71 - 2. பெயல் கனைந்து கூதிர் நின்றன்றால் - காலமழை செறிந்து கூதிர்க்காலமாய் நிலைபெற்றது ; அவ்விடத்து,


1 " எரிசுடர் நெருப்பைநீ ரென்ன வேட்டனர், தருகுளிர் நீரினைத் தழலி னஞ்சினார் " (சீகாளத்திப். பொன்முகரி. 45)

2இந்தளம் - தூபமுட்டி ; "வீதியிந்த ளத்தகிலின் வீசுபுகை வாசமெழும், ஆதியிந்த ளூரான் "(நூற்றெட்டுத் 22)