72. போது - பின்னர் நிகழ்ந்தபொழுது, வானம் கார்காலத்து மழையைப் பெய்ததாகப் (2) பின்னர் நிகழ்ந்த பொழுது (72) கோவலர் (3) நடுங்க (8) மறப்பக் கூர (9) வீழ (10) ஒழிய (11) மலரக் (14) கவரக் (17) கற்ப (20) வணங்க (22) முற்றத் (26) தூங்கத் (28) திரிதர (35) அயர (44) இருப்ப (48) மறுகத் (50) துறப்பப் (52) புகைப்பத் (56) தூங்கத் (59) துறப்ப (63) ஆர (66) நிறுப்பப் (70) புலம்பப் பெயல் செறிந்து (71) கூதிர்க்காலமாய் நிலை பெற்றது ; அவ்விடத்து (72) என முடிக்க. 72 - 5. [மாதிரம், விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டில, மிருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர், பொருதிறஞ் சாரா வரைநாளமயத்து :] மாதிரம் விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் குடக்கு ஏர்புதிசைகளிலே விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து, இரு கோல் குறிநிலை வழுக்காது ஒரு திறம் சாரா அமயத்து அரைநாள் - இரண்டிடத்து நாட்டின்இரண்டு கோலிடத்துஞ். சாயா நிழலால் தாரைபோக ஓடுகின்ற நிலையைக் குறித்துக் கொள்ளுந் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச் சாரப்போகாத சித்திரைத் திங்களின் நடுவிற் பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தாநாழிகையிலே 1அங்கு ரார்ப்பணம் பண்ணி, 76. நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு - 2சிற்பநூலையறிந்த தச்சர் கூரிதாக நூலை நேரே பிடித்து, 77. தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி - திசைகளைக் குறித்துக் கொண்டு அத்திசைகளில் நிற்குந் தெய்வங்களையும் குறைவறப் பார்த்து, 78 - 9.[பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து, ஒருங்கு :] பெரு பெயர் மன்னர்க்கு ஒப்ப ஒருங்கு மனை வகுத்து - பெரிய பெயரினையுடைய அரசர்க்கொப்ப மனைகளையும் வாயில்களையும் மண்டபங்கள் முதலியவற்றையுங் கூறுபடுத்தி, 79. உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் - இவ்விடங்களை யெல்லாம் சேரவளைத்து உயர்ந்த மதிலின் வாயி (88) லென்க. 80. பரு இரும்பு பிணித்து - ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டி, செவ்வரக்கு உரீஇ - சாதிலிங்கம் வழித்து, 81 - 5. [துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு, நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப், போதவிழ் குவளைப் புதுப்பிடி கால
1 அங்குரார்ப்பணம் - திருமுளைச்சார்த்து. 2 மதுரைக். 646, ந. குறிப்புரையைப் பார்க்க.
|