88. 1குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் - மலையை நடுவே வெளியாகத் திறந்தாற் போன்ற கோபுரவாயில்களையும், ஓங்கின நிலையையுடைய கோபுரத்தை ஓங்குநிலையென்றார் ; ஆகுபெயர். வரைப்பின் (79) வாயிலென்க. கதவுபொருத்திக் கோளமைத்த புணர்ப்பிளையுடைய நெடுநிலையினையுடைய வாயிலென்க. 89 - 92. [திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பிற், றருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து, நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை, குறுங்காலன்னமோ டுகளு முன்கடை :] 2நெடு மயிர் எகினம் தூ நிறம் ஏற்றை குறு கால் அன்னமொடு உகளும் முன்கடை - நெடிய மயிரினையுடைய கவரிமாவில் தூயநிறத்தையுடைய ஏற்றை குறியகாலினையுடைய அன்னத்தோடே தாவித்திரியும் வாசல்முன்பினையும், கடைமுன் முன்கடையென மரூஉமுடிபு. அன்னமும் தாவிப்பறத்தலின், உகளுமென்று கவரிமாவோடே ஒருவினை கூறினார். 3தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து. திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் - திருமகள் நிலைபெற்ற குற்ற மற்ற தலைமையினையும், வாயிலினையும் (88) முன்கடையினையும் (92) முற்றத்தினையும் (90) சிறப்பினையுமுடைய (89) கோயில் (100) என முடிக்க. 93 - 4. பணை நிலை முனைஇய பல் உளை புரவி புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு - பந்தியிலே நிற்றலை வெறுத்த பலவாகிய 4கேசாரியையுடைய குதிரைகள் புல்லாகிய உணவைக் குதட்டுந் தனிமை தோற்றுவிக்கின்ற குரலோடே, 95 - 7. 5நிலவு பயன்கொள்ளும் நெடு வெள் முற்றத்து கிம்புரி பகுவாய் அம்பணம் நிறைய கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து - நிலாவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள நீர்வந்து
1 "குன்று குயின்றன்ன - மலையை உள்வெளியாக வாங்கி இருப்பிட மாக்கினாற்போன்ற " (மதுரைக். 474, ந.) 2 " ஏழகத் தகரு மெகினக் கவரியுந், தூமயி ரன்னமுந் துணையெனத் திரியும்........... நீணெடு வாயி னெடுங்கடை" (சிலப் . 10 : 5 - 8) 3 இந்தப் பாகத்திற்கு உரை கிடைத்திலது ; கொண்டு வந்திட்ட மணல் பரந்த அழகிய வீட்டின் முன்னிடத்தையுமென்க. 4 மதுரைக். 391, ந. குறிப்புரையைப் பார்க்க. 5 " நிலவுப் பயன் கொள்ளுமென இடக்கரடக்கிக் கூறினார் " என்பர் அடியார்க்கு நல்லார் ; சிலப். 4 : 32,உரை.
|