455

வீழும் 1 மகரவாயாகப் பகுத்த வாயினையுடைய 2 பந்தநிறைகையினாலே கலங்கிவிழுகின்ற அருவியினோசைசெறிந்து,

97- 9. அயல் ஒலி நெடு பீலி ஒல்க மெல் இயல் கலி மயில் அகவும் 3வயிர் மருள் இன் இசை - அதற்கு அயலிடத்தனவாகிய தழைத்த நெடிய பீலி ஒதுங்க மெல்லிய இயல்பினையுடைய செருக்கின மயில் ஆரவாரிக்கும் கொம்பென்று மருளும் இனியவோசை,

100. நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் - செறிந்தமலையின் ஆரவாரம் போல ஆரவாரிக்கும் கோயில்,

புலம்புவிடுகுரலோடே (94) அருவிப்பாடும் (97) வயிர்மருளின்னிசையும் (99) விறந்து (97) மலைச்சிலம்பிற் சிலம்புங்கோயில் (100) என முடிக்க.

அருவியும் மயிலும் மலைக்கும் உள்ளனவாகலின், உவமைகொண்டார், புலம்புவிடுகுரல் மழை மெத்தெனமுழங்கினாற் போன்றிருத்தலின், உவமை கொண்டார்.

இனி அவற்றின் எதிரொலியெழுகின்ற கோயிலென்றுமாம்.

101 - 2. யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து - சோனகர் பண்ணின தொழில்மாட்சிமைப்பட்ட பாவை தன் கையிலே ஏந்தியிருக்கின்ற வியப்பையுடைய தகளிநிறையும்படி நெய் வார்க்கப்பட்டு,

103. பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி - பருந்திரிகளைப் பந்தங்களிலே கொளுத்திவைத்த நிறத்தையுடைத்தாகிய தலையினையுடைய மேனோக்கியெரிகின்ற விளக்கை,

104. அறு அறு காலை தோறு அமைவர பண்ணி - நெய் வற்றின காலந்தோறும் ஒளிமழுங்கின காலந்தோறும் நெய்வார்த்துத் தூண்டி,

105. பல் வேறு பள்ளி தொறும் பாய் இருள் நீங்க - பலவாய் வேறுபட்ட இடங்கடோறும் பரந்த இருள்நீங்கும்படி,

106 - 7. பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது ஆடவர் குறுகா அரு கடி வரைப்பின் - பெருமைபொருந்தின தலைமையினையுடைய பாண்டியனல்லது சிறுகுறுந்தொழில்செய்யும் ஆண்மக்களும் அணுகவாராத அரியகாவலையுடைய கட்டுக்களின்,

108. வரை கண்டன்ன தோன்றல -மலைகளைக்கண்டாற்போன்ற உயர்ச்சியையுடையவாய்,

108 - 9. வரை சேர்பு வில் கிடந்தன்ன கொடிய - மலைகளைச் சேர்ந்து இந்திரவில் கிடந்தாற்போன்ற பலநிறமாய் வீழ்ந்துகிடந்த கொடிகளையுடையவாய்,


1 நற். 132 : 2, ஏலாதி, 43

2 (பி - ம்.)‘ பந்தல் நிறைய'

3 வயிரிசை அன்றிலின் ஓசைக்கும் உவமை கூறப்படும் ; குறிஞ்சிப் . 219.