457

118 - 9. வல்லோன் கூர் உளி குயின்ற - தச்சன் கூரிய சிற்றுளியாலே பண்ணின,

119. ஈரிலை இடை இடுபு - பெரிய இலைத்தொழிலை இடையே இட்டு,

120 - 30. [ தூங்கியன் மகளிர் வீங்குமுலை கடுப்பப், புடைதிரண்டிருந்த குடத்த விடைதிரண், டுள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப், பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டின், மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு, முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப், புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத், தகடுகண் புதையக் கொளீஇத் துகடீர்ந், தூட்டுறு பன்மயிர் விரைஇ வயமான், வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து, முல்லைப் பல்போ துறழப்பூநிரைத்து :

ஊட்டுறு பல் மயிர் விரைஇ (128) - பலநிறம்பிடித்த மயிர்களை உள்ளேவைத்து அதன்மேலே,

வயமான் (128) வேட்டம் பொறித்து (129) - சிங்கமுதலியவற்றை வேட்டையாடுகின்ற தொழில்களைப் பொறித்த தகடுகளை வைத்து,

புலிமுதலியவற்றின் வரிகள் தோன்ற உள்ளே மயிர் விரவின.

வியல் கண் கானத்து (129) முல்லை போது உறழ பல்பூநிரைத்து (130) - அகற்சியை இடத்தேயுடைய காட்டிடத்து முல்லைப்போதுடனே மாறுபடும்படி ஏனைப் பல பூக்களையும் நிரைத்து,

சாலேகம் தகடு குத்துறுத்து (125) - சாளரங்களாகத்திறந்த தகடுகளை ஆணிகளாலே தைத்து,

மடை மாண் (124) பாண்டில் (123) - மூட்டுவாய் மாட்சிமைப்பட்ட வட்டக்கட்டில்,

கொம்பைச்செத்தி (117) உளியாற்குயின்ற இலையை இடையிட்டுப் (119) பொறித்து (129) நிரைத்துச் (130)

சாலேகத்தகடுகளைக் குத்துறுத்து (125) மடைமாண் (124) பாண்டில் (123) என முடிக்க. 

முத்து உடை (124) நுண் இழை பொலிய (124) நாற்றி (125) தொடை மாண்டு (124) பெரு அளவு எய்திய பாண்டில் (123) - முத்தைத் தன்னிடத்தேயுடைய மெல்லியநூல் அழகு பெறும்படி கட்டிலின் கீழே வீழ நாலுபுறமும்நாற்றி அதனைத் தன்னிடத்தே கட்டுதல் மாட்சிமைப்பட்டுப் பெரிய எல்லையைப்பெற்ற பாண்டிலெனக் கூட்டுக.

என்றதனால், தந்தத்தாற்சமைத்த கட்டிலைச்சூழ முத்துவடநாற்றியென்றார்.

புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து (126) கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து (127) பெரு பெயர் பாண்டில் (123) - புலியினது வரியைத் தன்னிடத்தேகொண்ட பொலிவுபெற்ற நிறத்தையுடைய