றார். பிறரும், இக்கருத்தேபற்றி, " ஆதரம் பெருகு கின்ற வன்பினாலன்ன மொத்தும்" (சீவக. 189) என்றார். 134 - 5. [காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத், தோடமை தூமடி விரித்த சேக்கை :] மேம்பட அணையிட்டு (133) காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து தூ மடி விரித்த தோடு அமை சேக்கை -அத்தூவிக்கு மேலாக அணைகளுமிட்டுவைத்துக் கஞ்சியைத் தன்னிடத்தே கொண்ட கழுவுதலுற்ற துகிலின் தூய மடித்ததுவிரித்த செங்கழுநீர்முதலியவற்றின் இதழ்கள் பொருந்தின படுக்கை, இணையணை சேக்கை மேம்படத் தூவி பாய் அத்தூவிக்கு மேம்பட1 அணையிட்டுத் தூமடிவிரித்த சேக்கையென்க. 136 - 7. ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து பின் அமை நெடுவீழ் தாழ - முன்பு முத்தாற்செய்த கச்சுச்சுமந்த பருத்தமுலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதலமைந்த நெடிய தாலி நாணொன்றுமே தூங்க, வீழ்ந்துகிடத்தலின் வீழென்றார். இனிப் பின்னுதலமைந்த நெடிய வீழ், மயிரென்பாருமுளர். 137. துணை துறந்து - அரசன் பிரிகையினாலே, 138. நல் நுதல் 2உலறிய சில் மெல் ஓதி - ஒன்றாகிய நுதலிடத்தே கைசெய்யாமல் உலறிக்கிடந்த சிலவாகிய மெத்தென்ற மயிரினையும், இனித் துணைதுறந்து உலறிய ஓதியெனக்கூட்டிக் கூடிக்கிடந்த தன்மைநீங்கி உலறிய ஓதியென்றுரைப்பாருமுளர். 139-40. [நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண், வாயுறையழுத்திய வறிதுவீழ் காதின் :] நெடு நீர் வார் குழை களைந்தென வறிது வீழ் காதின் - பெரிய ஒளியொழுகின் மகரக்குழையை வாங்கிற்றாகச் சிறிதேதாழ்ந்த காதினையும், நீர்மை - ஒளி. குறு கண்வாயுறை அழுத்திய காது - சிறிய இடத்தையுடைய தாளுருவி அழுத்திய காது, வாயுறவென்றுபாடமாயின், கடுக்கனை வாயுறும்படியழுத்தின காதென்க. 141-2. பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து - முன்பு பொன்னாற்செய்த தொடி
1 " ஐவகை யமளி யணைமேற் பொங்கத், தண்மலர் கமழும் வெண்மடி விரித்து "(திருவிடை . மும். 19) 2 உலறிய : சிறுபாண். 18.
|