460

கிடந்து தழும்பிருந்த மயிர் ஒழுங்குபட்டுக்கிடந்த முன்கையிலே 1வலம் புரியையறுத்துப்பண்ணின வளையை இட்டுக் காப்புநாணைக்கட்டி,

ஓடு : வேறுவினையொடு.

143 - 4. வாளை பகு வாய் கடுப்ப வணக்குறுத்து செ விரல் கொளீ இயசெ கேழ் 2விளக்கத்து - வளையினது பகுத்தவாயையொக்க முடக்கத்தையுண்டாக்கிச் சிவந்த விரலிடத்தேயிட்ட சிவந்த நிறத்தையுடைய 3முடக்கென்னு மோதிரத்தையும்,

145 - 6. பூ துகில் மரீஇய ஏந்து கோடு அல்குல் அ மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு - முன்பு பூத்தொழிலையுடைய 4துகில் கிடந்த உயர்ந்த வளைவினையுடையவல்குலில் இக்காலத்து உடுத்த அழுகிய மாசேறிய விளங்குகின்ற நூலாற் செய்த புடைவையுடனே,

147. [புனையா வோவியங் கடுப்பப் புனைவில் ;]

5 புனையா ஓவியம் கடுப்ப - வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவைக் கோட்டின சித்திரத்தை யொப்ப,

புனைவில் நல்லடி (151) என மேல் வருவதனைக் கூட்டி, கழுவிச் செம்பஞ்சிட்டுப் பூண்களணியாத நன்றாகிய அடியென்க.

148. தளிர் ஏர் மேனி - 6மாந்தளிரை யொத்த நிறத்தினையும், தாய சுணங்கின் - ரந்த சுணங்கினையும்,

149. அம் பணை தடைஇய மெல் தோள் - அழகினையுடைய மூங்கில்போலத் திரண்ட மெல்லிய தோளினையும்,

149 - 50. [ முகிழ்முலை , வம்புவிசித் தியாத்த :] வம்பு விசித்துயாத்த முகிழ் முலை - கச்சை வலித்துக் கட்டின தாமரைமுகைபோலும் முலையினையும்,

150. வாங்கு சாய் நுசுப்பின் - வளையும் நுடங்கு மிடையினையும்,


1 " அரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை " (மதுரைக். 316) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

2 விளக்கம் - மோதிரம் ; மதுரைக். 719, ந.

3 " வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் " (சிலப். 6 : 95) என்பதற்கு, ‘ முடக்கு மோதிரம் ' என்று அரும்பதவுரையாசிரியரும், நெளியென்று அடியார்க்கு நல்லாரும் எழுதுவர்.

4 துகில் - ஆடை வகையுள் ஒன்று ; " புடைவீழந்துகில்" (181) என்பர் பின்னும் ; " வாழ்வரே , பட்டுந் துகிலு முடுத்து " (நாலடி. 264)

5 " தேவு தெண்கட லமிழ்துகொண் டநங்கவேள் செய்த, ஓவியம்புகை யுண்டதே யொக்கின்ற வுருவாள் " (கம்ப. காட்சி. 11) என்பது இதிலிருந்து எழுந்து வளர்ந்த கருத்தென்று தோற்றுகின்றது.

6 " மாவின், அவிர்தளிர் புரையு மேனியர் " (முருகு. 143 - 4) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.