ஊறாவறுமுலை : குடத்திற்கு வெளிப்படை ; 1முலைபோறலின் முலை யென்றார். (நெடுநல். 120-21) 158. கால் திருத்தி - கட்டிற்கால்களுக்கு அருகாக நிற்கும்படி பண்ணி அதனிடத்தே கட்டி, 159. [ புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசை :] மெழுகு செய்படம் மிசை புதுவது இயன்ற - மெழுகு வழித்த மேற்கட்டியின் மேலே புதிதாக எழுதின, 160 - 61. [திண்ணிலை மருப்பி னாடுதலை யாக, விண்ணூர்பு திரி தரும் :] விண் - ஆகாயத்திடத்தே, திண் நிலை மருப்பின் ஆடு தலையாக ஊர்பு திரிதரும் - திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும், 161 - 2. வீங்கு செலல் மண்டிலத்து முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய - மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு 2திரியாமனின்ற, 163. உரோகிணி நினைவனள் நோக்கி - 3உரோகிணியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலேமேயென்று நினைத்து அவற்றைப் பார்த்து , ஞாயிறு, ஈண்டெழுதியதன்று ; திங்களிற்கு அடைகூறிற்று. நெடிது உயிரா - நெட்டுயிர்ப்புக்கொண்டு, 164 - 5, [ மாயித ழேந்திய மலிந்துவீ ழரிப்பனி, செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியா :] மா இதழ் வீழ் கண் கடை மலிந்து ஏந்திய அரி பனி சில செ விரல் சேர்த்தி தெறியா - நீலப்பூ விரும்பினகண் தன்கடைக்கண்ணிடத்தேவர மிக்குச் சுமந்த ஐதாகிய நீரிற் சிலவற்றைச் சிவந்த விரலைச் சேர்த்தித் தெறித்து, என்றது, மிகவுமழாமல் மல்கினநீரைத் தெறித்தென்றார். 166. புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு - தனிமையோடு கிடக்கும் அன்பு மிகுகின்ற அரிவைக்கு, அரசன் பிரிகையினாலே, நெடுவீழ்தாழ (137) நூல்யாத்து (142) மாசூர்ந்த கலிங்கத்தோடே (146) ஓதியினையும் 138) காதினையும் (140) விளக்கத்தினையும் உடையளாய் (144) மிகக்கலங்கி (156) உரோகிணி நினைவனணோக்கி நெடிதுயிர்த்துத் (163) தெறித்து (165) மகளிர் நல்
1 நெடுநல். 120-21. 2 (பி - ம்.) ‘ தெரியாமனின்ற' 3" உறுவுகொ ளுரோணியோ டுடனிலை புரிந்த, மறுவுடை மண்டிலக் கடவுளை " (பெருங். 2. 9 : 167 -8)
|