| வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா தெமியேந் துணிந்த வேமஞ்சா லருவினை நிகழ்ந்த வண்ண நீநனி யுணரச் செப்ப லான்றிசிற் சினவா தீமோ | 35 | நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை முத்தார் மருப்பி னிறங்குகை கடுப்பத் துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குர னற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பி யெற்பட வருதிய ரெனநீ விடுத்தலிற் | 40 | கலிகெழு மரமிசைச் சேணோ னிழைத்த புலியஞ் சிதண மேறி யவண சாரற் சூரற் றகைறெ வலந்த தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங் கிளிகடி மரபின வூழூழ் வாங்கி |
31. (பி-ம்.) ‘வண்ணமுந் தொடையும்' வண்ணமென்பது இயற்சொலென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். புறத். சூ. 27, ந. 35. "வாங்குகோ னெல்லொடு வாங்கி வருவைகல், மூங்கின் மிசைந்த முழந்தா ளிரும்பிடி" (கலித். 50: 1-2) 35-6. முத்தார் யானை மருப்பு: முருகு. 304-5 ; மலைபடு. 517-8. 37. "துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்வார் பிறைஞ்சித், தோடலைக் கொண்டன வேனல்" (நற். 206: 1-2) 35-8. தினைக்கதிர்க்கு யானைக்கை உவமை : "பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக், கொய்பத முற்றன குவவுக்குர லேனல்" (மலைபடு. 107-8) ; "பூம்பொறி யொருத்த லேந்துகை கடுப்பத், தோடு தலை வாங்கிய நீடுகுரற் பைந்தினை", "ஏனல், இரும்பிடித் தடக்கையிற் றடைஇய பெரும்புனம்", "முறஞ்செவி யானைத் தடக்கையிற் றடைஇ, இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை" (நற். 317:2-3, 344:2-3, 376:1-2) ; "பைந்தாட் செந்தினை மடப்பிடித் தடக்கை யன்ன............. குரல்", "பிடிக்கை யன்ன பெருங்குர லேனல்" (குறுந். 198;2-4, 360:5); "உறங்குபிடித் தடக்கை யொருங்குநிரைத் தவைபோல், இறங்குகுர லிறடி" (பெருங். 1. 49:103-4) 40. (பி-ம்.) ‘மீமிசை' "கலிதெழு மீமிசைச் சேணோன்" (சிலப். 25:30) 43-4. தழல் முதலிய மூன்றாலும் கிளிகடிதல் : "கட்டுவரிவிற் கருங்குறவர் கைத்தொழிலா, லிட்ட விதணத் திருந்தெம் பெரு
|