469
45யுரவுக்கதிர் தெறூஉ முருப்பவி ரமயத்து
விசும்பாடு பறவை வீழ்பதிப் படர
நிறையிரும் பௌவங் குறைபட முகந்துகொண் 
டகலிரு வானத்து வீசுவளி கலாவலின்
முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு
50நிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி 
யின்னிசை முரசிற் சுடர்ப்பூட் சேஎ
யொன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின்

மாட்டி, தட்டை குளிர்தழலைத் தாங்கித் தினைப்புனத்தைக், கிட்டலுறா வண்ணங் கிளிமுதற்புள் ளோட்டினளே" (கந்த. வள்ளி. 52)

தழலுந் தட்டையும்: "தழலுந் தட்டையு முறியுந் தந்து" (குறுந். 223:4) ; "தழலை வாங்கியும் தட்டை யோப்பியும், ......... குறமகள் காக்கு மேனல்" (அகநா. 188:11-3)

தட்டை :"கண்விடு புடையூத் தட்டை கவினழிந்து" (மதுரைக். 305) ; ஒலிகழைத் தட்டை புடையுநர்" (மலைபடு. 328) ; "சிறுதினைப் பெருங்குரல், செவ்வாய்ப் பைங்கிளி கவர.......வெதிர் புனை தட்டையேன்", "தட்டையும் புடைத்தனை கவணையுந் தொடுக்கென" (நற். 147 : 2-8, 206:5) ; "குறமகள்...............தட்டையின், ஐவனச் சிறுகிளி கடியு நாட" (ஐங். 285:1-3) ; "சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண், குளிர்கொ டட்டை மதனில புடையா" "அமையறுத் தியற்றிய வெவ்வாய்த் தட்டையின்,........சிறுதினை கவர்தலிற் கிளையமல், பெருவரை யடுக்கத்துக் குரீஇ யோப்பி, (அகநா. 32:5-6, 388:2-5); "தோகையுங் கிளியுந் தொக்கவை யகலத்........தடந்தோ ளசையத் தட்டை புடைத்து" (பெருங். 2. 12:118-20)

குளிர்: "சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ, குளிர்படு கையள்" (நற். 306, 2-3) ; கலித்த வேனற், படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே", "ஏனல், உண்கிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே" (குறுந். 291:1-2, 360:5-6)

குளிரும் குளிரியும் ஒக்குமெனக் கூறி இவற்றை மேற்கோள் காட்டுவர் ; தஞ்சை. 73, உரை.

45. "உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமயத்து" (குறுந். 154:2)

46. விசும்பாடு பறவை : "விசும்பா டன்னம்"(குறுந். 205:2)

47. "கடல்குறை படுத்தநீர்" (பரி. 201) : "நெடுங்கடலும்..............தடிந்தொழிலி, தானல்கா தாகி விடின்" (குறள், 17) (புரை.

49-50. மேகமுழக்கத்திற்கு முரசின்ஒலி : முருகு. 121, குறிப்

51-3. "செல்வக் கடம்பமர்ந்தான் வேன்மின்னி" (ஐந். ஐம். 1) ; "கண்ணொளி ரெஃகிற் கடிய மின்னி" (பரி. 22:7)