1 - திருமுருகாற்றுப்படை 1அந்தத்தை அணவுவார் அந்தணர்; என்றது, வேதாந்தத்தையே நோக்குவாரென்றவாறு. 96-8. [ ஒருமுக, மெஞ்சிய பொருள்களை2யேமுற நாடித், திங்கள் போலத் திசைவிளக் கும்மே:] ஒரு முகம் எஞ்சிய பொருள்களை நாடி ஏம் உற திங்கள் போல திசை விளக்கும் - ஒருமுகம் ஈண்டு வழங்காத வேதங்களிலும் நூல்களிலுமுள்ள பொருள்களை ஆராய்ந்து இருடிகள் ஏமமுறும்படி உணர்த்தித் திங்கள் போலத் திசைகளெல்லாம் விளக்குவிக்கும்; ஏமம் - இரட்சை. 3கலைநிறைதலிற் றிங்கள் உவமையாயிற்று. 98-100 [ ஒருமுகஞ், செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக், கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட் டன்றே:] ஒருமுகம் செல் சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு செறுநர் தேய்த்து4களம்வேட்டன்று - ஒருமுகம் திருவுள்ளத்துச் செல்கின்ற நடுவுநிலைமையைக் கெடுத்து இவர்களைக் கொல்லவேண்டுமென்று கறுவுதல் கொண்ட திருவுள்ளத்தோடே செறப்படும் அசுரர் முதலியோரைப் பொன்றக் கெடுத்துக் களவேள்வியை வேட்டது; சமம் - நடுவு நிலைமை; அதனைக் கெடுத்தலாவது, தேவரையும் அசுரரையும் ஒப்பக்கருதாது தேவரைக்காத்து அசுரரையழித்தல். 100-102. [ ஒருமுகங் குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின்,5மடவரல் வள்ளியோடு நகையமர்ந் தன்றே:] ஒருமுகம் குறவர் மடமகள் 6கொடிபோல் நுசுப்பின் வள்ளியொடு நகை அமர்ந்தன்று - ஒரு முகம் குறவருடைய மடப்பத்தையுடைய மகளாகிய வல்லி போலும் இடையினையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியைப் பொருந்திற்று;
1. "அந்தணர் - வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார்" (மதுரைக். 474, ந.); "அந்தத்தை யணவுவார் அந்தணர்; என்றது, வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பாரென்றவாறு" (கலித். கட. 3, ந.) 2.ஏமுற நாடி - இரக்கைபொருந்த ஆராயந்து ; ஏமம் கடைக்குறை பட்டது (வேறுரை) 3."கலைகள் நிறைந்திருந்தமைபற்றித் தலைவற்கு ஈண்டு மதி உவமையாயிற்று" (சிறுபாண். 220, ந.) "நாடோறும் நிறைந்தமதி உலகறியக் கலை நிரம்பினமை தோற்றுவித்தலின், உவமையாம்" (சீவக. 454, ந.) 4.போர்க்களத்தை விரும்பாநிற்கும் (வேறுரை) 5. கற்பின் வரலாற்றினையுடைய வள்ளி நாய்ச்சியார் (வேறு4ரை) 6. வல்லிசாதக்கொடி (வேறுரை)
|