470
மின்மயங்கு கருவிய கன்மிசைப் பொழிந்தென
வண்ண னெடுங்கோட் டிழிதரு தெண்ணீ 
55ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் 
தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப்
பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி
நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப்
பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம்
60பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவரி 
யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித
ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச் சிகை
65யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
70பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்

55. அருவிக்குத்துகில் உவமை : முருகு- 296, குறிப்புரை.

57. சுனைக்குப் பளிங்கு உவமை: "மணிகண் டன்ன துணிகயம்" (அகநா. 56:2) ; "பளிங்குவகுத் தன்ன தீநீர்" (புறநா. 150:27) ; "சூழ்ந்த பேரொளி துளும்பிய நிலனை நீ ரென்னாத், தாழ்ந்த வந்துகி லிடவயிற் றழீஇயினன் பளிங்கு, போழ்ந்தி யற்றிய நிலனெனப் பூம்புன லிடைப்போய், வீழ்ந்த னன்பெரு வேத்தவை முகிழ்நகை விளைப்ப" (பாகவதம், 10 : சிசுபாலனைக்கொன்ற. 118)

58. நளிபடு சிலம்பு : "நளிமலைச் சிலம்பு" (நெடுநல். 100) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

60. துவரி : நற். 96:6. பரிபாடல் 10:80.

61. "நீர்நீடாடிற் கண்ணுஞ் சிவக்கும்" (குறுந். 354)

64. செங்கொடுவேரி : பெருங். 2. 12:25.

68. இவ்வடி, எருவை, மலர்விசேட மென்பதற்கு மேற்கோள் ; பரி. 19:77, பரிமேல்.