| போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி | 75 | செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங் கரந்தை குளவி கடிகமழ் கலிமாத் தில்லை பாலை கல்லிவர் முல்லை குல்லை பிடவஞ் சிறுமா ரோடம் வாழை வள்ளி நீணறு நெய்த | 80 | றாழை தளவ முட்டாட் டாமரை ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி சேடல் செம்மல் சிறுசெங் குரலி கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் | 85 | பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி வஞ்சி பித்திகஞ் சிந்து வாரந் | 90 | தும்பை துழா அய் சுடர்ப்பூந் தோன்றி நந்தி நறவ நறும்புன் னாகம் பாரம் பீரம் பைங்குருக் கத்தி யாரங் காழ்வை கடியிரும் புன்னை நரந்த நாக நள்ளிரு ணாறி | 95 | மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் |
75. பெருந்தண்சண்பகம் : முருகு. 27. 77. கல்லிவர் முல்லை : "முல்லை தாய கல்லதர்ச் சிறுநெறி" (நற். 343:1) ; "முல்லை யூர்ந்த கல்லுயர் பேறி" (குறுந். 275:1) ; "கல்லிவர் முல்லைக் களிவண்டு" (யா-வி. சூ. 43, மேற்.) 80. முட்டாட்டமரை : முருகு. 73 ; சிறுபாண். 183, குறிப்புரை. 82. சிறுசெங்குரலி : பெருங். 2. 12:29. 84. கட்கமழ் நெய்தல் : "கட்கமழ் நெய்த லூதி" முருகு. 74) ; "கட்கமழு நறுநெய்தல்" (மதுரைக். 250) 87. (பி-ம்.) ‘அடம்பமர்' அடும்பு : "அடும்பிவ ரணியெக்க ராடிநீ தணந்தக்காற், கொடுங்குழை" (கலித். 132:16-7) ; "படும்புலால் பார்த்தும் பகர்தும் - அடும்பெலாம்" (திணைமாலை. 51) 96. (பி-ம்.) ‘பாரம்புழகுடன்'
|