| மாலங் குடைய மலிவன மறுகி வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப் புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின் | 100 | வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக் கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியாப் பைவிரி யல்குற் கொய்தழை தைஇப் பல்வே றுருவின் வனப்பமை கோதையெம் மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி | 105 | யெரியவி ருருவி னங்குழைச் செயலைத் தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த் தண்ணறுந் தகரங் கமழ மண்ணி யீரம் புலர விர லுளர்ப் பவிழாக் | 110 | காழகி லம்புகை கொளீஇ யாழிசை யணிமிகு வரிமிஞி றார்ப்பத் தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும் வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய |
96. புழகு : "அகன்றலைப் புழகும்" (பெருங். 2. 12:27) ; "அழகா வென்றிப் புழகா" (திருவால. 36:12.) 62-97. இவ்வடிகளிற் குறிஞ்சி நிலத்திற்கும் கூதிர்க்காலத்திற்கும் யாமத்திற்குமுரிய பூக்கள் மயங்கிவந்தமை, "எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்" (தொல். அகத். சூ. 19) என்பதனாலமையும். 100. வள்ளுயிர்த் தெள்விளி : "வள்ளுயிர்ப் பேர்யாழ்" (மலைபடு. 37) 101. (பி-ம்.) ‘பரியா' 105-6. குறுந். 214. 109. "முன்கை சூழ்ந்த, துகில்கொடு குஞ்சி யீரம் புலர்த்தி" (பெரிய. தடுத்தாட். 16.) 110-11. வண்டின் ஓசைக்கு யாழோசை : ‘நரம்பி னிம்மென விமிரு மாதர் வண்டு" (குறிஞ்சிப் : 147-8) ; பொருந. 211 குறிப் புரையையும், முல்லைப்பாட்டு, 8-ஆம் அடியின் குறிப்புரையையும் பார்க்க ; "அரவ வண்டின மார்த்துட னியாழ்செயும்", "இனவண்டி யாழ் செய", "பல்வண்டி யாழ்செய" (சிலப். 12 : "நாகநாறு", 26:112, 27:194) 113-4. சினையவுஞ் சுனையவும்...........மலர் : "சினையவுஞ் சுனையவு நாடினர் கொயல்வேண்டா" (கலித். 28:1-2)
|