115 | தண்ணறுந் தொடையல் வெண்போழ்க் கண்ணி நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சிப் பைங்காற் பித்திகத் தாயித ழலரி யந்தொடை யொருகாழ் வளைஇச் செந்தீ யொண்பூம் பிண்டி யொருகாது செரீஇ | 120 | யந்தளிர்க் குவவுமொய்ம் பலைப்பச் சாந்தருந்தி மைந்திறை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத் தொன்றுபடு நறுந்தார் பூணொடு பொலியச் செம்பொறிக் கேற்ற வீங்கிறைத் தடக்கையின் வண்ண வரிவில் லேந்தி யம்புதெரிந்து | 125 | நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி யியலணிப் பொலிந்த வீகை வான்கழ றுயல்வருந் தோறுந் திருந்தடிக் கலாவ முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற் பகைபுறங் கண்ட பல்வே லிளைஞரி | 130 | னுரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளு முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி திளையாக் கண்ண வளைகுபு நெரிதர நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா மிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம் படர | 135 | மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத் தாகாண் விடையி னணிபெற வந்தெ மலமர லாயிடை வெரூஉத லஞ்சி |
118. ஒருகாழ் : "முல்லை யொருகாழும்........கூந்தலுட் பெய்து" (கலித். 115:5-6) ; "ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே" (புறநா : 291:8) 118-9. அசோகம்பூவிற்கு நெருப்பு : "செந்தீ, யொண்பூம் பிண்டி" (மதுரைக். 700-701) அசோகந்தளிரைக் காதிற்செருகல் : முருகு. 31, குறிப்புரை. 128. மு. மலைபடு. 59. முனைபாழ்படுக்கும் : "முனையகன் பெரும்பா ழாக" (பதிற். 25:9) ; "முனைபாழ் பட்ட வாங்கண்", "முனைபா ழாக" (அகநா. 247:8, 349:6) 129-31. நாய்க்கு வீரர் : பெரும்பாண். 138-40, ந. குறிப்புரையைப் பார்க்க. 132. (பி-ம்.) ‘கிளையாக்' 135-6. குறுந். 74.
|