| மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி | 140 | யசைமென் சாய லவ்வாங் குந்தி மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த கெடுதியு முடையே னென்றன னதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கிக் கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு | 145 | சொல்லலும் பழியோ மெல்லிய லீரென நைவளம் பழுநிய பாலை வல்லோன் கைகவர் நரம்பி னிம்மென விமிரு மாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்த தாதவி ழலரித் தாசினை பிளந்து | 150 | தாறடு களிற்றின் வீறுபெற வோச்சிக் கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ் சொல்லற் பாணி நின்றன னாக விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பைப் பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்பத் | 155 | தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து சேம மடிந்த பொழுதின் வாய்மடுத் திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா |
138. "மெல்லிய வினிய மேவரு தகுந, விவைமொழி யாமெனச் சொல்லினும்" (குறுந். 306:1-2) 139. "நெய்யிடை நீவி மணியொளி விட்டன்ன, ஐவகை பாராட்டி னாய்மற் றெங்கூந்தல்" (கலித். 22:12-3) 140. அவ்வாங்குந்தி : அகநா. 390:10. 130-42. இவ்வடிகள், தலைவன் நாய்காத்தவாற்றிற்கு மேற்கோள் ; தொல். பொருளியல், சூ. 13, ந. 146. சிறுபாண். 36 ; "நைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம், பூத்தன பாணாநின் பாட்டு" (பரி. 18:20-21) 147-8. வண்டி னோசைக்கு யாழ்நரம்பினொலி : குறிஞ்சிப். 110, குறிப்புசை. 149. (பி-ம்.) ‘ததர்சினை' 148-50. பெருங். 2. 12:141-7. 152. இவ்வடி, ஆகவென்பது பிரிவிலசைநிலையாய் நிற்றற்கு மேற்கோள் ; தொல். இடை. சூ. 32, ந. 155. தேம்பிழி தேறல் : பெருங். 2. 2:177. 154-7. அகநா. 348:7-10.
|