| தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக் குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கிக் | 160 | கணைவிடு புடையூக் கானங் கல்லென மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக் கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக விரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச் சினந்திகழ் கடா அஞ் செருக்கி மரங்கொல்பு | 165 | மையல் வேழ மடங்கலி னெதிர்தர வுய்விட மறியே மாகி யொய்யெனத் திருந்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோ | 170 | லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற் |
158. வில்லிற்கு அரவு உவமை, "விடுபொறி யரவென விளங்கு வெஞ்சிலை", "அரவின் றோற்றமே போலுஞ் சிலைகளும்" (சீவக. 1850, 2158) 160. கானங் கல்லென : "கானங், கல்லென் றிரட்ட" (குறிஞ்சிப். 227-8) 161. பெரும்பாண். 166, குறிப்புரை. 165. யானைக்குக் கூற்றுவன் உவமை : "கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பின்................வேழம்" (முருகு. 81-2) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. 164-5. "நெடுநல் யானை, மையலங் கடாஅஞ் செருக்கி மதஞ் சிறந்து" (அகநா. 307:7-8) 162-5. யானைமுழக்கிற்கு இடி உவமை : பரி. 8:17-8 ; அகநா. 144:12-3 ; புறநா. 81:1-2 ; பு. வெ. 37, 289 167. (பி-ம்.) ‘வளைதெளிர்ப்ப' 169. "சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர், .............. அதிர்வனர் நடுங்கி" (பெருங். 1. 45:22-4) 170. உடுவுறும் பகழி: "உடுவுறு கணையிற் போகி" (அகநா. 292:12) ; உடு-சிறகு ; சீவக. 2191. ந. 170-71. "செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து, கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்" (தொல். செய். சூ. 95, பேர். மேற்.)
|