| நாணு முட்கு நண்ணுவழி யடைதர | 185 | வொய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ யாக மடைய முயங்கலி னவ்வழிப் பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தெனப் புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவி | 190 | னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற னீர்செத் தயின்ற தோகை வியலூர்ச் சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி யரிக்கூட் டின்னியங் கறங்க வாடுமகள் கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல் | 195 | வரையர மகளிரிற் சாஅய் விழைதக விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தட் டண்கம ழலரி தாஅய் நன்பல வம்புவிரி களத்திற் கவின்பெறப் பொலிந்த குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற | 200 | லுள்ளத் தன்மை யுள்ளினன் கொண்டு சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலருணப் பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில் | 205 | வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை |
184. "அச்சமு நாணும்.........நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப" (தொல். களவு. சூ. 8) ; உட்கு நாணு மொருங்குவந் தடைதர", "உட்கு நாணு மொருங்குவந் தடைய" (பெருங். 3. 6:87, 4. 13:100) ; "உட்கும் நாணும் ஒருங்கு வருதலின்" (சீவக. 731, ந.) 193-4. ஆடுமகள் கயிறூர்தல் : "தனிக்கயிற்றிற் - போநீள், கழைக்கோதையர்" (நள. சுயம். 148) 201-2. "நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோளறியாச் சொன்றி" (குறுந். 233:5-6) 202-3. பொருந. 66 ; சிறுபாண். 206, குறிப்புரை. 205. (பி-ம்.) ‘வான்றுணை'
|