| நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங் கறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழு | 210 | தேமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி யந்தீந் தெண்ணீர் குடித்தலி னெஞ்சமர்ந் தருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும் பூமலி சோலை யப்பகல் கழிப்பி | 215 | யெல்லை செல்ல வேழூர் பிறைஞ்சிப் பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய மான்கண மரமுதற் றெவிட்ட வான்கணங் கன்றுபயிற் குரல மன்றுநிறை புகுதர வேங்குவயி ரிசைய கொடுவா யன்றி | 220 | லோங்கிரும் பெண்ணை யகமட லகவப் பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவல ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற வாம்ப லாயிதழ் கூம்புவிட வளமனைப் பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி |
206-7. "வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி, மிச்சின் மிசைவான் புலம்" (குறள், 85) 212. களிறுதரு புணர்ச்சி ; நம்பி. சூ. 177, உரை. 217-8. ஆன்கணம் மாலையில் கன்றையுள்ளிப்புகுதல் : குறுந். 108:2 ; கலித். 119:9-10 ; அகநா. 14-9-12 ;மணி. 5:132. 219. குறுந். 160:1-2. 221. "நாம கதிர்பட வுமிழ்ந்த, மேய்மணி விளக்கின்" (அகநா. 72:14-5) 222. ஆம்பலந் தீங்குழல்: ஐங். 215:4 ; சிலப். ஆய்ச்சியர். 217-22. "அன்னாய் வாழிவேண் டன்னை யென்னுங் குறிஞ்சிப் பாட்டினுள், ‘மான்கண மரமுதற் றெவிட்ட ....... தெள்விளி பயிற்ற என்புழி முல்லைக்குரிய கருப்பொருளாகிய ஆன்கணமும் பாம்பும் கோவலரும் ஆம்பற்குழலும் அதற்குரிய முதற்பொருளாகிய மாலையும் நெய்தற்குரிய கருப்பொருளாகிய அன்றிலும் பனையும் வந்தவாறு கண்டுகொள்க" (நம்பி. ஒழிபு. சூ. 421, உரை) 223. ஆம்பலாயிதழ் கூம்புவிட : புறநா. 209:3, 383:7. 224. மதுரைக். 555-6, குறிப்புரை.
|