480
நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும் 
வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் 
பெறாஅன் பெயரினு முனிய லுறாஅ
னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற்
245றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர் 
மாய வரவி னியல்புநினைஇத் தேற்றி 
நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா
வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்க
ணாகத் தரிப்பனி யுறைப்ப நாளும்
250வலைப்படு மஞ்சையி னலஞ்செலச் சாஅய்
நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்கு
லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும்
புழற்கோட் டாமான் புகல்வியுங் களிறும் 
வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத்
255துருமுஞ் சூரு மிரைதே ரரவமு
மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங் 
கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு
நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும்
பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும்

240-41. நம்பி. சூ. 161.

242. தோளிற்றுயிலல் : " அரிவை தோளிணைத் துஞ்சி" (குறுந். 323:6) ; "வேயுறழ் மென்றோட் டுயில்பெறும்" (கலித். 104:24) ; "முருந்தேர் முறுவ லிளையோள், பெருந்தோ ளின்றுயில் கைவிடுகலனே" (அகநா. 193:13-4) ; "தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின்" (குறள், 1103)

245. (பி-ம்.) ‘திரிந்தன்றுமிலன்'

231-45. உண்மை செப்பற்கு இவ்வடிகள்மேற்கோள் ; தொல். பொருளியல், சூ. 13, ந.

247. "வண்டுபடு மலரிற் சாஅய்த், தமியேன் மன்ற வளியேன்யானே" (குறுந்,30:5-6)

250. "ஓரி முருங்கப் பீலி சாய, நன்மயில் வலைப்பட் டாங்கு" (குறுந், 244:5-6)

258. ஊழடி முட்டம் : பெருங். 1. 52:32. 

259. பழு : குறுந். 180:1.