481
260வழுவின் வழாஅ விழுமமவர்
குழுமலை விடரக முடையவா லெனவே.

251-61. இவ்வடிகளுடன், "தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகா நின்ற நிலைமைக்கண், எம்பெருமான் வரும்வழி, எண்கும் வெண்கோட்டி யானையும் அரவும் உருமும் புலியும் வரையர மகளிருமுடைத்து ; மற்றும் தெய்வங்கள் வௌவும் வண்ணத்தன ; ஏதம்நிகழ்வது கொல்லோவென வேறுபடும்" (இறை. சூ. 29, உரை) என்பது ஒப்புநோக்கற்பாலது.


 

இதன் பொருள்

இதற்குக் குறிஞ்சியென்று பெயர் கூறினார், இயற்கைப்புணர்ச்சியும் பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறுதலின் ; அன்றியும் முதலானும் கருவானும் குறிஞ்சிக்குரியனவே கூறுதலானும் அப் பெயர் கூறினார். "அறத்தொடு நிற்குங் காலத் தன்றி, யறத்தியன் மரபில டோழி யென்ப" (தொல். பொருள். சூ. 12) என்பதனால், தோழி அறத்தொடு நிற்குங் காலம்வந்து செவிலிக்கு அறத்தொடு நின்றவழி அதற்கிலக்கணங்கூறிய, "எளித்த லேத்தல் வேட்கையுரைத்தல், கூறுதலுசாத லேதீடு தலைப்பா, டுண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ, யவ்வெழு வகைய தென்மனார் புலவர்" (தொல். பொருள். சூ. 13) என்னும் சூத்திரத்து ஏழனுள், கூறுதலுசாதலொழிந்தஆறுங்கூறி அறத்தொடு நிற்கின்றாளென்றுணர்க.

1. அன்னாய் வாழி - தாயே வாழ்வாயாக ; 

[வேண் டன்னை :] அன்னை வேண்டு-தாயே யான் கூறுகின்ற வார்த்தையை விரும்புவாயாக ; 

1-12. [ஒண்ணுத, லொலிமென் கூந்தலென் றோழி மேனி, விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ, யகலு ளாங்க ணறியுநர் வினாயும், பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும், வேறுபல் லுருவிற் கடவுட் பேணி, நறையும் விரையு மோச்சியு மலவுற், றெய்யா மையலை நீயும் வருந்துதி, நற்கவின் றொலையவு நறுந்தோ ணெகிழவும், புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு, முட்கரந் துறையு முய்யா வரும்படர், ெ்சப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் :] 

ஒள் நுதல் (1) ஒலி மெல் கூந்தல் (2) விறல் (3) மேனி என் தோழி (2) உள் கரந்து உறையும் உய்யா அருபடர் (11) - ஒள்ளிய நுதலினையும் தழைக்கும் மெல்லிய மயிரினையும் பிறர் நிறத்தினைவென்ற வெற்றியினையுடைய நிறத்தினையுமுடைய என்னுடைய தோழி தன்மனத்துள்ளே