பேணியுமென்னுமும்மை சிறப்பு ; ஏனைய எண்ணும்மை. எய்யா மையலை வருந்துதி (8)- இந்நோயையறியாத மயக்கத்தை யுடையையாய் வருந்தாநின்றாய் ; என் தோழி (2) படர் (11) இழைநெகிழ்த்தநோய் (3) நினக்குச் செப்பல் வன்மையின் யான் செறித்துத் (12) தொலையவும் நெகிழவும் (9) அறியவும் அலைப்பவும் (10) கடவலின் (12) நீயும் (8) அலவுற்று (7) வினாய்க் (4) கடவுளைப் பேணியும் (6) எய்யாமையலை உடையாயாய் வருந்துதி (8) யென முடிக்க. 13-4. [முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை, நேர்வருங்குரைய கலங்கெடிற் புணரும் :] அத்துணை, முத்தினும் மணியினும் பொன்னினும் நேர் வரும் கலம் கெடின் புணரும் - அவ்வளவாகிய முத்தானும் மாணிக்கத்தானும் பொன்னானும் பொருந்துதல்வரும் பூண்கெட்டவாயிற் பின்னும் வந்துகூடும் ; அதுபோலன்றி, முத்து முதலியவற்றிற் கூறிய இலக்கணங்களை அத்துணையென்றார். குரைய : அசை. 15-8. [சால்பும் வியப்பு மியல்புங் குன்றின், மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த, லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை, யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர் :] சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசு அற கழீஇ வயங்கு புகழ் அந்நிலை நிறுத்தல்-தத்தங் குலத்திற்கேற்ற குணங்களினமைதியும் மேம்பாடும் 1ஒழுக்கமும் பழையதன்மைகெட்டாற் பிறந்த அழுக்கைப் போம்படி கழுவி விளங்கும்புகழை முன்புபோல நிற்கும்படி நிறுத்தல், தொல் மருங்கு அறிஞர் ஆசு அறு காட்சி ஐயர்க்கும் எளிய என்னார் - பழைதாகிய நூலையறிவார், குற்றமற்ற அறிவினையுடைய தெய்வ இருடிகளுக்கும் எளியகாரிய மென்னார் ; "ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியும்" (தொல். கற்பு. சூ. 5) என்றாராகலின் ஐயர் தேவராகார். 19 - 20. [மாதரு மடனு மோராங்குத் தணப்ப, நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி :] நெடு தேர் எந்தை அரு கடி நீவி-நேடியதேரையுடைய என் தந்தையது அரிய காவலைக் கடந்து, மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப - இருமுதுகுரவரும் தமக்கு இயைந்தோர்க்குக் கொடுப்பேமென்றிருக்கின்ற காதலும் எனதுமடனும் சேரப்போக,
1 "பார்ப்பான், பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" (குறள், 134)
|