484

21. [இருவே மாய்ந்த மன்ற லிதுவென :] இது இருவேம் ஆய்ந்த மன்றல் என - இந்தமணம் தலைவனும் யானும் 1பெருமையும் உரனும் அச்சமும் நாணும் நுணுகிய நிலையாற் பிறந்த கந்தருவமணமென்று,

22. நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ - நாம் யாய்க்கு அறிவுறுத்தலான் நமக்குப் புகழேயன்றி வருவதோர் பழியுமுண்டோ? அஃதில்லை ;

உம்மை : எச்சவும்மை. ஓகாரம் : எதிர்மறை, 2இது மறைநூல் விதித்ததாகலின்.

23. ஆற்றின் வாரார் ஆயினும் - இங்ஙனம் அறத்தொடு நின்றபின் தலைவர்க்கே நம்மை அடைநேர்ந்திலராயினும்,

ஆற்ற - நாம் உயிர்போந்துணையும் இவ்வருத்தத்தைப் பொறுத்திருக்க,

24. [ஏனை யுலகத்து மியைவதா னமக்கென :] நமக்கு ஏனை உலகத்தும் இயைவதால் என - நமக்கு 3மறுபிறப்பினும் இக்கூட்டம் கூடுவதொன்றாயிருந்ததெனக் கூறி,

25-6. [மானமர் நோக்கங் கலங்கிக் கையற், றானாச் சிறுமையளிவளுந் தேம்பும் :] ஆனா சிறுமையள் மான் அமர் நோக்கம் கலங்கிகையற்று இவளும் தேம்பும் - ஆற்றுந்தன்மைத்தல்லாத நோயினையுடையளாய் மான் நோக்கமமர்ந்த நோக்கமின்றி மையனோக்கங் கொண்டு வினையொழிந்து அயர்ந்து இவளும் மெலியும் ;

இவளும் (26), கலங்கி (25), கெடிற் புணரும் (14) ; அதுபோலன்றிச் சால்பு முதலியனகுன்றின் (15) நிறுத்தல் (16) எளியவென்னார் (18) ஆகலின், இஃது இருவேமாய்ந்தமன்றலென (21) அறிவுறாலிற்


1பெருமையும் உரனும் தலைவன் குணங்கள் ; அச்சமும் நாணும் தலைவியின் குணங்கள், தொல். களவு. சூ. 7,8 ; "நாணு முட்கு நண்ணுவழி யடைதர" (குறிஞ்சிப். 184)

2இது வென்றது கந்தருவ மணத்தை ; அது மறைநூல் விதியென்பதை, "மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுட், டுறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே" (தொல். களவு. சூ. 1), "அருமறைமன்ற லெட்டினுட், கந்தருவ வழக்கம்" (இறை. சூ.1), "காந்தர்ப்பமென்ப துண்டாற் காதலிற் கலந்த சிந்தை, மாந்தர்க்கு மடந்தை மார்க்கு மறைகளே வகுத்த கூட்டம்" (கம்ப. சூர்ப்பநகை. 54) என்பவற்றாலுணர்க.

3 "இம்மை மாறி மறுமை யாயினும், நீயா கியரென் கணவனை, யானாகியர்நின் னெஞ்சுநேர் பவளே" (குறுந். 49:3-5) ; "அவரை எதிர்ப் படாதிருத்தல் அன்பன் றென்னுங் கருத்தால், பிறப்பானடுப்பினும் பின்னுந் துன்னத்தகும் பெற்றியரென்றாள்" (திருச்சிற். 205, பேர்.)