பழியுமில்லை (22) ; ஆற்றின்வாராராயினும் ஆற்ற (23) ஏனையுலகத்தும் இயைவதாலெனக்கூறி (24) மெலியும் (26) எனமுடிக்க. "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும், வரையா நாளிடை வந்தோன் முட்டினு, முரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணுந், தானே கூறுங் காலமு முளவே" (தொல். களவு. சூ. 21) என்பதனுள், ‘தானே கூறுங் காலமுமுளவே, என்றதனால் 1தலைவி கூற்றினைக் கொண்டு கூறினாளென்றுணர்க. "செறிவு நிறையுஞ் செம்மையுஞ் செப்பு, மருமையு மறிவும் பெண்பா லான " (தொல். பொருளியல், சூ. 15) என்பதனால் மறைபுலப்படுத்தலாகா தென்றாராயினும், "உற்றுழி யல்லது சொல்ல லின்மையி, னப்பொருள் வேட்கை கிழவியி னுணர்ப" தொல். பொருளியல், சூ. 14) என்பதனால் மறை புலப்படுத்தலுமாமென வழுவமைத்தலின் இங்ஙனம் தலைவிகூறினாள். இதனால் தோழி 2தலைப்பாடுகூறினாள். 27-8. இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் வினை இடை நின்ற சான்றோர் போல- 3மாறுபாட்டின் மிகுதியைச் செலுத்தும் இருவராகிய பெரிய அரசரைச் 4சந்துசெய்விக்குந் தொழிலிடத்தேநின்ற அறிவுடையோரைப்போல, 29. இரு பெரு அச்சமோடு யானும் ஆற்றலேன் - நினக்கும் இவள் வருத்தத்திற்குமஞ்சும் இரண்டு பெரிய அச்சத்தாலே யானும் வருந்தா நின்றேன் ; 30. கொடுப்பின் நன்கு உடைமையும் - கொடுத்தபின்பு எல்லா வற்றானும் நன்றாகிமுடிதலையும், குடி நிரல் உடைமையும் - ஒருகுடியாகாமல் இரண்டுகுடியும் ஒத்த லுடைமையையும், 31. வண்ணமும் - குணத்தையும், துணையும் - சுற்றத்து உதவிகளையும், பொரீஇ எண்ணாது - ஒப்பித்துப்பார்த்துப் பின்னரும் பலருடன் உசாவாதே, "செந்துறை, வண்ணப் பகுதி வரைவின் றாங்கே" (தொல். புறத். சூ. 27) என்பதனால் வண்ணம் குணமென்றுணர்க.
1தலைவிகூற்றை 24-ஆம் அடியிற் காண்க. 2தலைப்பாடு கூறல் - தலைவனும் தலைவியும் தாமே எதிர்ப்பட்டார், யான் அறிந்திலேனெனக்கூறல். 3"வலிமிகு வெகுளியான் வாளுற்ற மன்னரை, நயனாடி நட்பாக்கும் வினைவர்போல்" (கலித். 46:7-8) 4சந்துசெய்வித்தல் - சந்திசெய்வித்தல்.
|