32. எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை - நும்மையின்றித் தமியேமாய் யாங்களே துணிந்த உயிர்க்குப் பாதுகாவலமைந்த செய்தற்கரிய இக்கந்தருவமணம், தானும் புணர்ச்சிக்குப்பின் உடம்படுதலின், எமியேந் துணிந்த வென்றாள். 33. நிகழ்ந்த வண்ணம் - முன்புநடந்தபடியை, 33-4. நீ நனி உணர செப்பல் ஆன்றிசின் - நீ மிகவுமறியும்படி சொல்லுதலையமைந்தேன் ; 34. சினவாதீமோ - அதுகேட்டுச் சினவாதிருப்பாயாக; 35. நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை - நெல்லைத் தன்னிடத்தே கொண்ட நெடிய மூங்கிலைத் தின்றற்கு மேனோக்கி நின்று வருந்தின யானை அவ்வருத்தந்தீரும்படி, 36. முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப - முத்துநிறைந்த கொம்பிலே ஏறட்டுநான்ற கையையொப்ப, 37 - 8. துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரு குரல் நல் கோள் சிறு தினை படு புள் ஓப்பி - துய்யையுடைய தலைவளைந்த ஈன்றணிமை தீர்ந்த பெரிய கதிர்களை நன்றாகத் தன்னிடத்தே கொள்ளுதலையுடைய சிறிய தினையிலே வீழ்கின்ற கிளிகளையோட்டி, துய் - இளைதான பருவத்துப் பஞ்சு நுனைபோன்றிருப்பது. கடுப்ப வளைந்த வென்க. 39. எல் பட வருதியர் என நீ விடுத்தலின் - பகற்பொழுது கழியா நிற்க நீர் வருவீராகவென்று கூறி நீ போகவிடுகையினாலே யாங்களம் போய், வருதியர் : வியங்கோண்முற்று. 40-41. கலி கெழு மரம் மிசை 1சேணோன் இழைத்த புலி அஞ்சு இதணம்- ஆரவாரம் பொருந்தின மரத்தின் உச்சியிலே இராக்காலம் ஆகாயத்திருப்போன் பண்ணினபுலி அஞ்சுகைக்குக்காரணமான பரண், 1 "சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி" (குறுந். 150:1) என்றார் பிறரும். 41-2. [ஏறி யவண, சாரற் சூரற் றகைபெற வலந்த :] அவண சாரல் சூரல் தகை பெற வலந்த இதணம் (41) ஏறி - அவ்விடத்தன வாகிய மலைப்பக்கத்துப் பிரம்பாலே அழகுபெறத் தெற்றின இதணத்தே யேறி, இனிச் சூரலாலேபிணித்த தழலென்றுமாம். சூரல் - சூரற்கொடியுமாம். 43. தழலும் - தழலும்,
1 "சேணோன் - பரணின்மேலோன்" (சிலப். 25:30, அரும்பத.)
|