488

அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் (48) மயங்கி (50) - 1ஏனைப்பூதங்கள் விரிதற்குக்காரணமான கரிய ஆகாயத்திடத்தே வீசுகின்ற காற்றுத் தன்னிடத்தே கூடுகையினாலே நிரைத்த நிரைபோய்க் கலங்கி,

53. கல் மிசை பொழிந்தென - மலைமேலே பெய்தவாக,

கொண்மூக் (50) கருவியவாய் (53) மயங்கிப் (50) பறவை பதிப்படரப் (46) பொழிந்தென (53) என்க.

54-6. அண்ணல் நெடு கோடு இழிதரு தெள் நீர் அவிர் துகில் புரையும் அ வெள் அருவி தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி - தலைவனுடைய நெடிய மலைச்சிகரத்தினின்றும் 2குதிக்கின்ற தெளிந்த நீரையுடைய விளங்குகின்ற வெள்ளிய துகிலையொக்கும் அழுகிய வெள்ளி தாகிய அருவியிலே நீங்குதலில்லாத விருப்பையுடையேமாய் அமையாமல் விளையாடி,

அண்ணன்மலையில் அருவியெனவே நிலமொன்றென்றாள்.

57 - 8. [பளிகுங் சொரி வன்ன பாய்சுனை குடைவுழி, நளிபடு சிலம்பில் :] நளி படு சிலம்பில் பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடை வுழி - செறிவுண்டான மலையிடத்துப் பளிங்கைக் கரைத்துச் சொரிந்து வைத்தாற்போன்ற பரந்த சுனையைக் குடைந்துவிளையாடுகின்ற விடத்தே,

58. 3பாயம் பாடி - எங்கள்மனத்துக்கு விருப்பமானவற்றைப் பாடி,

59-60. பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம் பின் இரு கூந்தல் பிழிவனம் 4துவரி - பொன்னிலேயழுத்தின நீலமணிபோல சிறிய முதுகிடத்தே தாழ்ந்துகிடந்த எம்முடைய பின்னுதலையுடைய கரியகூந்தலை நீரைப்பிழிந்து ஈரத்தைப்புலர்த்தி,

61. உள் அகம் சிவந்த கண்ணேம் - உள்ளாகிய இடமெல்லாஞ் சிவந்த கண்ணேமாய்.

61-2. வாள் இதழ் ஒள் செ காந்தள் - பெரிய இதழையுடைய ஒள்ளிய சிவந்த கோடற்பூ,

62. ஆம்பல் அனிச்சம் - ஆம்பற்பூ அனிச்சப்பூ,

63. தண் கயம் குவளை-குளிர்ந்த குளத்திற்பூத்த செங்கழுநீர்ப்பூ, குறிஞ்சி- குறிஞ்சிப்பூ,


1பெரும்பாண். 1, ந. குறிப்புரையைப் பார்க்க.

2 "குதிபாய் கடாம்" (தக்க. 3)

3 பாயம் - மனவிருப்பம் ; பெரும்பாண். 342.

4துவர்தல் - உலர்த்தல் ; "துவராக்கூந்தல் - ஈரம்புலராத கூந்தல்" (பதிற். 89:16, உரை) ; "கண்ணும்வாயுந் துவர்ந்து" (திருவாய். 8. 5:2)