64. செங்கொடு வேரி - செங்கொடுவேரிப்பூ, 1தேமா - தேமாம்பூ, மணிச்சிகை - செம்மணிப்பூ, 65. 2உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் - தனக்கு உரித்தாக நாறும் விரிந்தகொத்தினையுடைய பெருமூங்கிற்பூ, கூவிளம் - வில்லப்பூ, (வில்வம்) 66. எரி புரை எறுழம் - நெருப்பையொத்த எறுழம்பூ, சுள்ளி - மராமரப்பூ, கூவிரம் - கூவிரப்பூ, 67. வடவனம் - வடவனப்பூ, வாகை - வாகைப்பூ, வால் பூ குடசம் : வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப்பூ, 68. எருவை - பஞ்சாய்க்கோரை, கொறுக்கைச்சியுமாம். செருவிளை - வெண்காக்கணம்பூ, மணி பூ கருவிளை - நீலமணிபோலும் பூக்களையுடைய கருவிளம்பூ, 69. பயினி - பயினிப்பூ, வானி - வானிப்பூ, பல் இணர் குரவம் - பல இதழ்களையுடைய குரவம்பூ, 70. 3பசும்பிடி - பச்சிலைப்பூ, வகுளம் - மகிழம்பூ, பல் இணர் காயா - பல கொத்துக்களையுடைய காயாம்பூ, 71. விரி மலர் ஆவிரை - விரிந்த பூக்களையுடைய ஆவிரம்பூ, வேரல் - சிறுமூங்கிற்பூ, சூரல் - சூரைப்பூ, 72. குரீஇப்பூளை - சிறுபூளை, குறுநறுங் கண்ணி - குன்றிப்பூ, 73. குருகிலை - முருக்கிலை, மருதம் - மருதப்பூ,
1 ‘தேமா' என்பதுமுதல், ‘பெருமூங்கிற்பூ' என்பதிறுதியாக வுள்ளவைகள் தருமபுரவாதீனமடத்திலிருந்து கிடைத்த ஒரு பழைய ஏட்டுப் புத்தகத்தில் மட்டும் இருந்தன. 2 உரிததென்பது உரித்தென்பதன் விகாரமென்பர்; கலித். 76:17, ந. 3 "பசும்பிடி யிளமுகிழ் - பச்சிலையது இளையகொழுந்து" (பரி. 19:75, பரிமேல்.)
|