49

1 - திருமுருகாற்றுப்படை

நிமிர் - தோள் - பெருகு தோள்,

நிறைந்து நிமிர்தோளென்க.

வசிந்தென்பது பிளந்தென்னும் பொருட்டாதலின், செய்வதன் தொழிற்கும் செய்விப்பதன் தொழிற்கும் பொது. அசுரர் முதலியோரை அழிக்குங்காலத்துப் பன்னிருகையினும் படைக்கலமேந்துவனென்று உணர்க; அஃது அறுவேறுகையி னஞ்சுவர மண்டி (58) என்றதனானுணர்க.

வசிந்தென்பதற்குப் படைக்கலங்களால் வடுப்பட்டென்று பொருளுரைத்தல்1இறைவனாதலிற் பொருந்தாது.

இனி மொய்ம்பினையுடைத்தாய் ஒளிவிட்டு நிறைந்து வளையவேண்டுமிடம் வளைந்து நிமிரவேண்டுமிடம் நிமிரும் தோளென்றும் உரைப்பர். இதற்கு வசிந்தென்பனைத் தொடியொடுகொட்ப (114) மணியிரட்ட (115) என மேலே கூட்டுக.

இனி, அவை போர்செய்யாக்காலத்து இங்ஙனமிருக்குமென்று அவற்றின் இயல்பு கூறுகின்றார்.

அத்தோள்களில் ஒருகையென்க.

107. [ விண்செலன் மரபி னையர்க் கேந்திய தொருகை:] ஒருகை2விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது - ஒருகை எக்காலமும் ஆகாயத்தே இயங்குதல் முறைமையினையுடைய தெய்வவிருடிகளுக்குப் பாதுகாவலாக வெடுத்தது;

108. [ உக்கஞ் சேர்த்திய தொருகை:] ஒருகை உக்கம் சேர்த்தியது - ஏந்தியகைக்கு இணைந்தகை மருங்கிலேவைத்தது;

என்றது - ஞாயிற்றின்வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்றா வென்று கருதித்3தமதருளினாற் சுடரொடுதிரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கின்ற முனிவரைப்பாதுகாக்கவே உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று. இதனானே இக்கை மாயிருண் ஞாலமறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்த முகத்திற்கு (91 - 2) ஏற்ற தொழில்செய்ததாயிற்று. இது, "நிலமிசை வாழ்ந ரலமர றீரத், தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,


1. இங்கே இவ்வாறு கூறியது, "வாண்மிகு வயமொய்ம்பின்" (பரி. 9 : 57) என்பதற்குப் பரிமேலழகர், ‘வாட்டழும்பு நெருங்கிய வெற்றிமொய்ம்பினையுடைய முருகன்' என்றெழுதிய உரையைக் கருதிப் போலும்.

2.ஆகாயத்திலே இயக்கத்தை முறைமையாகவுடைய தேவர்க்கு (வேறுரை)

3. "சுடரொடு திரிதரு முனிவரு மமரரும்" (சிலப். வேட்டுவ. 18)